| | வித்தகன் சிலை விடு கணை விசையினும் கடுகி, அத் தடம் பெருந்தேரொடும் எடுத்து, எறிந்து, ஆர்த்தான். |
உய்த்த வெம்சரம் - அவ்வாறு இந்திரசித்து செலுத்திய கொடிய அம்புகள்; உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப - தனது மார்பிலும் கைகளிலும் அழுந்த; மாருதி - அனுமன்; கைத்த சிந்தையன் நனிதவகனன்றான் - வெறுத்த மனத்தினனாய், மிகவும் கோபம் மேற் கொண்டவனாய்; வித்தகன் சிலை விடுகணை விசையினும் கடுகி - ஞானவடிவனான இராமபிரான் வில்லில் தூண்டும் அம்பின் வேகத்தினும் அதிக வேகமாகச் சென்று; அத்தடம் தேரொடும் எடுத்து - அந்த மிகப் பெரிய தேருடனே (இந்திரசித்தைத்) தூக்கி; எறிந்து ஆர்த்தான் - மேலே வீசி எறிந்து ஆரவாரஞ் செய்தான். அனுமன்,இந்திரசித்தைத் தேரோடு எடுத்து எறியச் செல்லும் வேகத்துக்கு, இராமபிரானது அம்பின் வேகம் உவமை கூறப்பட்டது. வித்தகன் - மேலோன். (இராமபிரான்) (76) | 5793. | கண்ணின்மீச் சென்ற இமை இடை கலப்பதன் முன்னம், எண்ணின் மீச்சென்ற எறுழ் வலித் திறலுடை இகலோன், புண்ணின் மீச்சென்று பொழி புனல் பசும் புலால் பொடிப்ப, விண்ணின் மீச்சென்று, தேரொடும் பார்மிசை வீழ்ந்தான். |
எண்ணின் மீசென்ற எறுழ்வலி திறலுடை இகலோன் - எண்ணத்தைக் கடந்து சென்ற (வரம்பு கடந்த) மிக்க வலிமையுடைய பகைவனான இந்திரசித்து; தேரொடும் விண்ணின் மீ சென்று - (அனுமன் எடுத்தெறிந்த விசையினால்) தேரோடும் வானத்தின்மேல் எல்லையில் போய்; புண்ணின் மீ சென்று பொழி புனல் பசும் புலால் பொடிப்ப - புண்களின் மேலே பெருகி வழிகின்ற இரத்தம் புதிய புலால் நாற்றத்தோடு வெளிப்பட; கண்ணின் மீ சென்ற இமை இடை கலப்பதன் முன்னம் - கண்களின் மேல்உள்ள |