பக்கம் எண் :

702சுந்தர காண்டம்

5797.

கொண்டு, கொற்ற வெஞ் சிலை நெடு நாணொடு
                                   கூட்டி,
சண்ட வேகத்தமாருதி தோளொடு சாத்தி,
மண் துளங்கிட,மாதிரம் துளங்கிட, மதி தோய்
விண்துளங்கிட, மேரு துளங்கிட, விட்டான்.

     கொண்டு -அவ்வாறுபிரம்மாத்திரத்தைக் கையில் கொண்டு;
கொற்றவெம் சிலை நெடு நாணொடு கூட்டி -
அதை, தனது வலிய கொடிய
வில்லி்ன் நீண்ட நாணோடு சேர்த்து; சண்ட வேகத்த மாருதி தோளொடு
சாத்தி -
கொடிய வேகமுடைய அனுமனது தோள்களை இலக்காகக்
குறிவைத்து; மண் துளங்கிட - பூமி நடு்ங்க; மாதிரம் துளங்கிட - திசைகள்
நடுங்க; மதிதோய் விண் துளங்கிட - சந்திரன் தங்கிய வானம் நடுங்கிட;
மேருவும் துளங்கிட -
மேரு மலையும் நடுக்கம் கொள்ள; விட்டான் -
அதனைத் தூண்டி விட்டான்.

     இந்திரசித்துதெய்வத்தன்மையுள்ள பிரம்மாத்திரத்தை, அனுமனுடைய
தோள்களைக் கட்டுமாறு மந்திரம் கூறி விட்டனன் என்க. மேருவும்; உம்மை
உயர்வு சிறப்பினது. பிரம்மாத்திரத்தி்ன் வலிமை இச்செய்யுளில்
தெரிவிக்கப்பட்டது.                                        (81)

அயன் படைக்குஅடங்கிய அனுமனிடம் இந்திரசித்து வருதல்

5798.

தணிப்பஅரும் பெரும் படைக்கலம், தழல் உமிழ்
                            தறுகண்
பணிக்குலங்களுக்கு அரசினது உருவினைப் பற்றி,
துணிக்க உற்று,உயர், கலுழனும் துணுக்குற, சுற்றிப்
பிணித்தது, அப்பெரு மாருதி தோள்களைப் பிறங்க.

     தணிப்பு அரும் -எவராலும் அடக்குதற்கு அரியதான; பெரும்
படைக்கலம் -
பெரிய அந்த அத்திரமானது; தழல் உமிழ் தறுகண் - கனல்
வீசும் கொடுமை வாய்ந்த; பணி குலங்களுக்கு அரசினது உருவினை பற்றி
-
பாம்புக் கூட்டங்களுக்கு அரசனுடைய வடிவத்தை ஏற்றுக் கொண்டு;
துணிக்க உற்று உயர் கலுழனும் -
அதனைத் துண்டிக்க வந்த உயர எழும்
கருடனும்; துணுக்குற - அஞ்சும்படி; அப் பெரு மாருதி தோள்களை
பிறங்க சுற்றி பிணித்தது -
அந்தப் பெரிய அனுமன் தோள்களை நன்றாகச்
சுற்றிக் கொண்டு கட்டிவிட்டது.