பாம்புகளை எளிதில் அழிக்கும் தன்மையதான கருடனும் அஞ்சும்படி, பெரும் பாம்பின் வடிவத்துடன் சென்ற பிரமாத்திரம் அனுமன் தோள்களைப் பிணித்தது என்க. (82) | 5799. | திண்ணென்யாக்கையைத் திசைமுகன் படை சென்று திருக, அண்ணல் மாருதி,அன்று, தன் பின் சென்ற அறத்தின் கண்ணின்நீரொடும், கனக தோரணத்தொடும், கடைநாள், தண்ணென் மா மதிகோளொடும் சாய்ந்தென, சாய்ந்தான். |
திசை முகன் படை- பிரம்மதேவன் ஆயுதம்; திண் என் யாக்கையை சென்று, திருக - வலிமை வாய்ந்த அனுமனது உடலைப் போய்ச் சுற்றிக் கட்ட, (வருத்த); அண்ணல் மாருதி - பெருமையை உடைய அனுமன்; கடை நாள் - யுக முடிவுக் காலத்தில்; தண் என் மாமதி கோளொடும் சாய்ந்தென - குளிர்ச்சியான பெரிய பூர்ண நிலவு (நாடு என்ற)பாம்புடனே வானத்தினின்றும் கீழே விழுந்தால் போல; அன்று தன் பின்சென்ற அறத்தின் கண்ணி்ன் நீரொடும் - (அவன் இலங்கையில் புகுந்த)அன்று, தன்பின்னே வந்த தரும தேவதையின் கண்ணீரொடும்; கனக தோரணத்தொடும் சாய்ந்தான் - பொன் மயமான தோரண வாயிலோடும் படிந்து சாய்ந்து விழுந்தான். அசோக வனத்துவெளிவாயிலில் நின்று அரக்கர்களுடன் போர் செய்த அனுமன் பிரம்மாத்திரத்தால் கட்டுண்டு அவ்விடத்திலேயே சாய்ந்தான். இதனைக் கனக தோரணத் தொடும் சாய்ந்தான் என்பதால் உணரலாம். மதி, அனுமனுக்கும், தோரணம், கோளுக்கும் ஒப்பு. (83) | 5800. | சாய்ந்தமாருதி, சதுமுகன் படை எனும் தன்மை ஆய்ந்து, ‘மற்றுஇதன் ஆணையை அவமதித்து அகறல் ஏய்ந்தது அன்று’என எண்ணினன், கண் முகிழ்த்து இருந்தான்; ‘ஓய்ந்தது ஆம்இவன் வலி’ என, அரக்கன் வந்துற்றான். |
|