பக்கம் எண் :

பாசப் படலம்705

அயன் படையில்கட்டுண்ட அனுமன் தோற்றம்

5802.

‘குரக்குநல் வலம் குறைந்தது’ என்று, ஆவலம்
                           கொட்டி
இரைக்கும் மாநகர் எறி கடல் ஒத்தது; எம்
                           மருங்கும்
திரைக்கும்மாசுணம் வாசுகி ஒத்தது; தேவர்,
அரக்கர்ஒத்தனர்; மந்தரம் ஒத்தனன், அனுமன்.

     குரக்கு நல் வலம்- குரங்கினுடைய நல்ல வலிமை; குலைந்தது
என்று-
நிலை கெட்டது என்று எண்ணிக் களித்து; ஆவலம் கொட்டி
இரைக்கும்மாநகர்  - 
வாய்விட்டு உரக்கக்கத்தி, முழக்கமிடும் அந்தப்
பெரிய இலங்கைநகரம்; எறிகடல் ஒத்தது - அலைமோதும் கடலை
ஒத்திருந்தது;எம்மருங்கும் திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது -
எப்புறமும் அனுமன்உடலைச் சுற்றிப் பிணித்த பிரம்மாத்திரமாகிய பாம்பு
வாசுகி என்னும் பாம்பைஒத்து விளங்கியது; அரக்கர் தேவர் ஒத்தனர் -
அரக்கர்கள், முன் கடல்கடைந்த தேவர்களை ஒத்து விளங்கினர்; அனுமன்
மந்தரம் ஒத்தனன் -
(நாக பாசத்தால் சுற்றப் பட்ட) அனுமன், (வாசுகியால்
சுற்றப்பட்ட) மந்தரமலையைப் போன்று விளங்கினான்.             (86)

5803.

கறுத்தமாசுணம், கனக மா மேனியைக் கட்ட,
அறத்துக்கு ஆங்குஒரு தனித் துணை என நின்ற
                           அனுமன்,
மறத்து, மாருதம்பொருத நாள், வாள் அரா அரசு
புறத்துச் சுற்றியமேரு மால் வரையையும் போன்றான்.

     கறுத்த மாசுணம் -கோபம்கொண்ட அந்தப் பிரம்மாத்திரமாகிய
பாம்பு; கனகமா மேனியை கட்ட - பொன்னிறமான அனுமன் திருமேனியை
வலிதில் இறுக்கிப் பிணிக்க; அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என
நின்ற அனுமன் -
தரும தேவதைக்கு, அந்த இலங்கையில் தான் ஒருவனே
துணைவனாக இருந்த அனுமன்; மறத்து மாருதம் பொருத நாள் வாள் அர
அரசு -
வலிமையோடு காற்று வீசியடித்த காலத்து, ஒளி தங்கிய
அரவுக்கரசனான ஆதிசேடன்; புறத்து சுற்றிய - தன் வெளிப் புறமெல்லாம்
நன்றாகச் சுற்றிக் கொண்டதாய் இருந்த;