| 5833. | அவ் உரை,தூதரும், ஆணையால், வரும் தெவ் உரைநீக்கினான் அறியச் செப்பினார்; இவ் உரைநிகழ்வுழி, இருந்த சீதையாம் வெவ் உரைநீங்கினாள் நிலை விளம்புவாம்; |
தூதரும் - தூதுவர்களும்;அவ் உரை - அந்தச் சொல்லை; ஆணையால் - இராவணனது கட்டளைப்படி; வரும் - தம் எதிரே அனுமனைப் பற்றிக் கொண்டு வரும்; தெவ் உரை நீக்கினான் அறிய செப்பினார் - பகைவர் என்ற சொல்லையே நீக்கிய இந்திரசித்து தெரிந்து கொள்ளும்படிக் கூறினார்கள்; இவ் உரை நிகழ்வுழி - இந்த வார்த்தை எங்கும் பரவிய போது; இருந்த சீதையாம் - அசோகவனத்தில் காவலில் இருந்த சீதையாகிய; வெவ் உரை நீங்கினாள் நிலை விளம்புவாம் - கொடியபழிச் சொல்லின் நீங்கியவளது நிலையைக் கூறுவோம். இது கவிக்கூற்று.தெவ் உரை நீக்கினான்; பகைவர்களே இல்லாதபடி செய்தவன் என்பது கருத்து, வெவ் உரை நீங்குதலாவது பழி நாணித் தகை சான்ற சொற்காத்தலாகும். (29) அனுமனுக்கு உற்றதைத்திரிசடை சொல்ல, சீதை புலம்புதல் | 5834. | ‘இறுத்தனன்கடி பொழில், எண்ணிலோர் பட ஒறுத்தனன்’ என்றுகொண்டு உவக்கின்றாள், உயிர் வெறுத்தனள்சோர்வுற, வீரற்கு உற்றதை, கறுத்தல் இல்சிந்தையாள் கவன்று கூறினாள். |
கடிபொழில்இறுத்தனன் - மணம் மிக்கஅசோகவனத்தை ஒடித்தழித்தான்; எண் இலோர் பட ஒறுத்தனன் - அளவிறந்த அரக்கர்கள் அழியுமாறு கொன்றிட்டான்; என்று கொண்டு -என்றுஅவ்வப்போது சொல்லக் கேட்டுணர்ந்து;உவக்கின்றாள் - மகிழ்கின்றவளான சீதாபிராட்டிக்கு; கறுத்தல் இல்சிந்தையாள் - களங்கமில்லாத மனத்தை உடையவளான திரிசடை என்பவள்;வீரற்கு உற்றதை - மகாவீரனான அனுமனுக்கு ஏற்பட்ட துன்ப நிலையை;உயிர் வெறுத்தனள் சோர்வுற - தன் உயிரை வைத்துக் கொண்டு வாழ்வதில்வெறுப்புற்றவளாய், தளர்ச்சி அடையும்படி; கவன்று கூறினாள் -மனக்கவலையுடன் சொன்னாள். |