வஞ்சனை உடையஇராக்கதனால்; பற்றுண்டாய் - சிறைப்படுத்தப் பெற்றாய்; அறப்பான்மை இதுவோ - அறத்தின் இயல்பு இதுதானோ ? ‘சகல கலைகளையும்கற்ற நீ, ஒரு கள்ள அரக்கனால் கட்டுண்டாயே’ என்று அனுமனைப் பாராட்டி வருந்தினாள் பிராட்டி. ஆற்றலும் அறிவும் பெற்றவர்கள் நன்மை அடைதல்தான் அறத்தின் பான்மை. இங்கு, அதற்கு நேர் மாறான பயன் ஏற்பட்டுள்ளதால் அறத்தின் பான்மையோ ! என்று சீதா பிராட்டி ஐயமுற்றாள் என்க. (32) | 5837. | ‘கடர் கடந்து புகுந்தனை; கண்டகர் உடர் கடந்தும்நின் ஊழி கடந்திலை; அடர் கடந்ததிரள் புயத்து ஐய ! நீ இடர்கள்தந்தனை, வந்து இடர் மேலுமே ? |
நீ கடர் கடந்துபுகுந்தனை - நீ, கடலைக் கடந்துஇங்கு வந்தாய்; கண்டகர் உடர் கடந்தும் - முள் போன்று கொடியவர்களான பல அரக்கர்களுடைய உடம்பின் வலிமையை அழித்து வெற்றி கொண்டு நின்றும்; நின் ஊழி கடந்திலை - உனது வாழ்நாள் ஒழியப் பெற்றிலை (இவ்வாறு); அடர் கடந்த திரள் புயத்து ஐய ! - பகைவர் வலிமையை வென்ற பருத்த தோள்களை உடைய ஐயனே ! (நீ அரக்கர்கள் கையில் சிக்கியதனால்); வந்து இடர் மேலும் இடர்கள் தந்தனை - (கிட்கிந்தையினின்று) இங்கு வந்து எனக்குத் துன்பத்தின் மேலும் துன்பங்களை உண்டாக்கியவனானாய். இராமபிரானைப்பிரிந்ததனாலான துன்பத்தின் மேலும், இராம தூதன் பகைவர் கையில் கட்டுண்டதனாலான துன்பம் சேர்ந்து மேன்மேலும் வருத்துதலால் ‘வந்து இடர்கள் மேலும் இடர் தந்தனை என்று பிராட்டி கூறி வருந்தினாள். (33) | 5838. | ‘ஆழி காட்டி, என் ஆர் உயிர் காட்டினாய்க்கு, “ஊழிகாட்டுவென்” என்று உரைத்தேன்; அது வாழி காட்டும்என்று உண்டு; உன் வரைப் புயப் பாழி காட்டி,அரும் பழி காட்டினாய். |
ஆழிகாட்டி -இராமபிரானது கணையாழியை யான் காணுமாறு கொண்டுவந்து கொடுத்து; என் ஆருயிர் |