பக்கம் எண் :

726சுந்தர காண்டம்

    இராவணன்தங்கியிருந்த அரண்மனைக்கு, இந்திரசித்து, அனுமனைக்
கட்டிய நிலையில் கொண்டு சென்றான் என்பதாம். முகுந்தன் - சமர்த்தன்;
திறமை வாய்ந்தவன். முருந்து - பறவைகளின் வலிய அடிக் குருத்து.
பறவையின் அடிக்குருத்து போன்று, இராவணனுக்கு உதவுபவன் இந்திரசித்து
என்பது கருத்து.                                             (37)
 

கலிநிலைத்துறை

5842.

தலங்கள்மூன்றிற்கும் பிறிது ஒரு மதி தழைத்தென்ன
அலங்கல்வெண்குடைத் தண் நிழல் அவிர் ஒளி
                                     பரப்ப,
வலம் கொள்தோளினான் மண்நின்று வான் உற
                                     எடுத்த,
பொம் கொள் மா மணி வெள்ளியங்குன்று எனப்
                                     பொலிய,

     அலங்கல்வெண்குடை - முத்து முதலியமணிச்சரங்கள் அசையப்
பெற்ற வெண் கொற்றக் குடையானது; தலங்கள் மூன்றிற்கும் பிறிது ஒரு
மதி<தழைத்து என்ன -
மூவுலகங்களுக்கும் ஒளி வீசும் படி, வேறு ஒரு
சந்திரன்சிறந்து விளங்குவது போல; தண் நிழல் அவிர் ஒளி பரப்ப -
குளிர்ச்சியானநிழலையும் விளங்குகின்ற ஒளியையும் பரவச் செய்யவும்; வலம்
கொள்தோளினால் -
தன் வலிமை கொண்ட தோள்களால்; மண் நின்று
வான் உறஎடுத்த -
தரையிலிருந்து ஆகாயத்தை அளாவுமாறு மேலே
தூக்கிய; பொலம்கொள் மாமணி வெள்ளியம் குன்று என பொலிய -
அழகு கொண்டபெரிய சிறந்த கயிலையங் கிரியாகிய  வெள்ளி மலைபோல,
விளங்கவும்.

     ‘இருந்த’ என(55வது பாடல்) முடியும்.  குடைக்கு மதியும்,
வெள்ளியங்கிரியும் உவமைகளாகக் கூறப்பட்டன.                   (38)

5843. 
 

புள் உயர்த்தவன் திகிரியும், புரந்தரன் அயிலும்,
தள் இல்முக்கணான் கணிச்சியும், தாக்கிய தழும்பும்,
கள் உயிர்க்கும்மென் குழலியர் முகிழ் விரல் கதிர்
                           வாள்
வள் உகிர்ப்பெருங் குறிகளும், புயங்களில் வயங்க,

     புள் உயர்த்தவன்திகிரியும் - கருடப் பறவை விளங்க
உயர்த்தப்பெற்றகொடியை உடைய திருமாலினது சக்கராயுதமும்; புரந்தன்
அயிலும் -
இந்திரனது வச்சிராயுதமும்; தள் இல்