முக்கணான் கணிச்சியும்- விலக்கமுடியாத, முக்கண்ணனாகிய சிவபிரானது சூலாயுதமும்; தாக்கிய தழும்பும் - தம் மீது பட்டு உண்டாக்கிய வடுக்களும்; கள் உயிர்க்கும் மென் குழலியர் - தேனைச் சொரியும் மிருதுவான கூந் தலைஉடைய தன் காதல் மகளிர்; முகிழ் விரல் - அரும்பு போல் குவிந்தவிரல்களில் உள்ள; கதிர்வாள் வள் உகிர் - சுடரோடு கூடிய வாள் போன்றகூரிய நக நுனிகளால் உண்டாகிய; பெரும் குறிகளும் புயங்களில் வயங்க -பெரிய அடையாளங்களும் பெரிய தோள்களில் விளங்கவும். இராவணனதுவீரத்துக்கும் காதலுக்கும் அடையாளமாக விளங்குகின்றன அவன் தோள்களில் காணப்படும் வடுக்கள் என்பது கருத்து. (39) | 5844. | துன்று செம்மயிர்ச் சுடர் நெடுங் கற்றைகள் சுற்றி, நின்று திக்குற,நிரல்படக் கதிர்க் குழாம் நிமிர, ஒன்றுசீற்றத்தின் உயிர்ப்பு எனும் பெரும் புகை உயிர்ப்ப, தென் திசைக்கும்ஓர் வடவனல் திருத்தியது என்ன, |
துன்று செம்மயிர் சுடர் நெடுங்கற்றைகள் சுற்றி நின்று திக்குற - அடர்ந்தசிவந்த மயிர்களின் ஒளியுள்ள நீண்ட தொகுதிகள் சுற்றிலும் பரந்து நின்று எல்லாத்திசைகளிலும் அளாவ; நிரல்பட கதிர் குழாம் நிமிர - (அவற்றினின்று) வரிசை வரிசையாக (சிவந்த) ஒளிப் பிழம்புகள் (அவனது கரிய உடலின் மேல்) உயர்த்தெழுந்து விளங்குவதாலும்; ஒன்று சீற்றத்தின் உயிர்ப்புஎனும் பெரும் புகை உயிர்ப்ப - பொருந்திய கோபத்தால் எழுந்த பெருமூச்சாகிய பெரிய புகை வெளிப்படுவதாலும்; தென் திசைக்கும் ஓர் வடிஅனல் திருத்தியது என்ன - தெற்குத் திசைக்கும், ஒரு வடவைத் தீயை, அமைக்கப்பட்டதென்று சொல்லும்படியாகவும். இராவணனதுசெம்மயிர்க்கற்றைகளும், அவன் விடும் கோபப் பெருமூச்சும், தென் திசைக்கும் ஒரு வட அனல் (வடவாமுகாக்கனி) அமைந்தவை போன்றிருந்தன என்பதாம். (40)
| 5845. | மரகதக்கொழுங் கதிரொடு மாணிக்க நெடு வாள் நரக தேயத்துள்நடுக்குறா இருளையும் நக்க, சிரம்அனைத்தையும் திசைதொறும் திசைதொறும் செலுத்தி, உரகர்கோன்இனிது அரசு வீற்றிருந்தனன் ஒப்ப, | |