தரம் - தகுதி.ஒருவர் தகுதியால் பெற்ற சிறப்புகள் அளவுபட்டிருக்கும். இது அளவு கடந்திருத்தலின் தவத்தின் பயன் என்று கூறப்பெற்றது. தவம் செய்ததவம் - நல்வினைகளால் உண்டானதவம். தவமும் தவம் உடையார்க்கு ஆகும். என்னும் குறளுக்கு மணக்குடவர் தவம் செய்தலும் முன்பு நல்வினை செய்தார்க்கு வரும் என்று கூறினார். பெரும்பான்மையானபாடம் ‘தவம் செயத் தகுமால்’ என்பது. அப்பாடம் அரக்கர் தவத்தால் சிறப்புப்பெற்றனர். ஆகையால்”தவமே செய்யத் தரும்’ என்று பொருள் தரும். (9) | 4844. | தேவர்என்பவர் யாரும் இத்திரு நகர்க்கு இறைவற்கு ஏவல் செய்பவர்,செய்கிலாதவர் எவர் என்னின், மூவர் தம்முளும்ஒருவன் அங்கு உழையனா முயலும் ! தாவில் மாதவம்அல்லது பிறிதொன்று தகுமோ ? |
திருநகர்க்குஇறைவற்கு - இந்த இலங்கைஅரசனுக்கு; தேவர் என்பவர் யாரும் - தேவர் என்று சொல்லப்படுபவர் அனைவரும்; ஏவல் செய்பவர் - அடிமைப் பணி புரிவோர்; (ஏவல்) செய்கிலாதவர் எவர் என்னின் - (அவனுக்கு) பணிபுரியாதவர் எவர் என்றால்; மூவர் தம்முளும் - மும்மூர்த்திகளில்; ஒருவன் - ஒருவனாகிய பிரமதேவன்; அங்கு - அந்த இலங்கையில்; உழையனா முயலும் - பணிசெய்பவனாக முயல்கின்றான்; தா இல் மாதவம் அல்லது - குற்றமற்ற பெருந்தவம் அல்லது; பிறிது ஒன்று தகுமோ - வேறு ஒன்று செய்தற்குத் தகுதியுடையது ஆகுமோ. உழையன் -அருகிருப்போன்; ஏவல்கூவல் செய்பவன். தேவரும் பிரமதேவனும் ஏவலர் ஆனது மாட்சியால் என்பதால் தவத்தால் எதையும் பெறலாம் என்பது விளங்கும். தவமே செய்யத்தக்கது என்பதாம். (10) | 4845. | ‘போர் இயன்றன தோற்ற’ என்று இகழ்தலின் புறம்போய் நேர் இயன்ற வன்திசைதொறும் நின்றமா நிற்க ஆரியன்தனிஐங்கரக் களிறும், ஓர் ஆழிச் சூரியன் தனித்தேருமே இந்நகர் தொகாத. |
போர் இயன்றன -போரைச்செய்ய உடன்பட்டு; தோற்ற என்று - தோற்றுப் போயின என்று; இகழ்தலின் - (இராவணன்) |