பக்கம் எண் :

பிணி வீட்டு படலம்779

சிந்த நூறி - அக்ககுமாரன்முதலிய சிறந்த அரக்கர்களை சிதறி அழியக்
கொன்றும்; சீதையொடும் பேசி மனிதர் திறம் செப்ப வந்த - சீதையுடன்
தனியே பேசியும், அற்ப மனிதர்களது வலிமையைச் சொல்லவும்
இராவணனிடத்து வந்த; குரங்கிற்கு உற்றதனை - இந்தக் குரங்குக்கு நேர்ந்த
துன்ப நிலையை; காண வம்மின் வம் என்று - பார்ப்பதற்கு வாருங்கள்
வாருங்கள் என்று; தம் தம் தெருவும் வாயில் தொறும் - தத்தம்
வீதிகளிலும்வீட்டு வாயில்கள் எல்லாவற்றிலும்; யாரும் அறிய சாற்றினார் -
அனைவரும்அறியும்படிக் கூறினார்கள்.

      இராவணனுடையஏவலர்கள், குரங்குக்கு ஏற்பட்டுள்ள துன்ப நிலையைக்
காண வருமாறு அனைவரையும்அழைத்தனர் என்க.                (125)

அனுமனுக்கு உற்றதுகேட்டுச் சானகி எரியைச் ‘சுடாதே’ எனல்

 

5930.

ஆர்த்தார், அண்டத்து அப் புறத்தும்
             அறிவிப்பார்போல்; அங்கோடு இங்கு
ஈர்த்தார்;முரசம் எற்றினார்; இடித்தார்; தெழித்தார்,
             எம் மருங்கும்
பார்த்தார்;ஓடிச் சானகிக்கும் பகர்ந்தார்; அவளும்
             உயிர் பதைத்தாள்;
வேர்த்தாள்;உலந்தாள்; விம்மினாள்; விழுந்தாள்;
            அழுதாள்; வெய்து உயிர்த்தாள்.

     அண்டத்துஅப்புறத்தும் அறிவிப்பார் போல் - (அரக்கர்கள்) இந்த
அண்ட கோளத்துக்கு அப்பால் உள்ள இடங்களுக்கும் இச் செய்தியைத்
தெரிவிப்பவர் போல; ஆர்த்தார் - பேரொலி எழுப்பி ஆரவாரித்தார்கள்;
அங்கொடு இங்கு ஈர்த்தார் -
அங்கும் இங்குமாக அனுமனைக் கட்டி
இழுத்தார்கள்;  முரசம் எற்றினார் - பேரிகைகளைத் தாக்கி அடித்து ஒலி
எழுப்பினார்கள்; இடித்தார் - (சிலர்) இடிமுழக்கம் போலக் கர்ச்சித்தார்கள்;
தெழித்தார் -
(சிலர்) அனுமனை அதட்டினார்கள்; எம் மருங்கும் பார்த்தார்
-
(சிலர்) எப்புறமும் அனுமனைச் சுற்றிப் பார்த்தார்கள்; ஓடி சானகிக்கும்
பகர்ந்தார் -
(சிலர்) ஓடிப் போய் அனுமனுக்கு உற்ற நிலையை, பிராட்டிக்கும்
சொன்னார்கள்; அவளும் உயிர் பதைத்தாள் - (அது கேட்ட) பிராட்டியும்
உயிர் துடித்தாள்;