அலட்சியம்செய்தமையால்; புறம்போய் - வெளியே சென்று; நேர் இயன்ற - எதிரெதிராக உள்ள; வன்திசை தொறும் - வலிமைமிக்க திசைகள் தோறும்; நின்றமா - நிற்கின்ற யானைகள்; நிற்க - ஒதுங்கி நிற்க; இ நகர் தொகாத - இந்நகரைச் சாராதவைகள் (யானைகளில்); ஆரியன் - (யானைகளில்) சிவபிரான் பெற்றெடுத்த; தனி ஐங்கரக் களிறும் - ஒப்பற்ற ஐந்து கரங்களைப்பெற்ற விநாயகராகிய யானையும்; சூரியன் - தேர்களில் சூரியனின்; ஓர்ஆழித் தனித்தேருமே - ஒரு சக்கரத்தையுடைய ஒப்பற்ற தேருமே யாகும். ஐங்கரக் களிறு -விநாயகப் பிரான், ஆரியன் என்றது தட்சிண மூர்த்தியான சிவபிரானை. பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியன் என்பார் மணிவாசகர். ஆரியன் சாஸ்தா என்றும் கூறலாம். சாஸ்தாவின் வாகனம் யானை. (11) | 4846. | வாழும் மன்னுயிர் யாவையும் ஒருவழி வாழும் ஊழி நாயகன்திருவயிறு ஒத்துளது, இவ்வூர்; ஆழி அண்டத்தின்அருக்கன்தன் அலங்கு தேர்ப்புரவி ஏழும் அல்லன,ஈண்டுஉள குதிரைகள் எல்லாம். |
இவ்வூர் -இந்தஇலங்கை மாநகர்; வாழும் மன்னுயிர் யாவையும் - உலகில் வாழ்கின்ற உயிர்கள் எல்லாம்; ஒருவழி வாழும் - ஓரிடத்தில் கூடி வாழ்கின்ற; ஊழி நாயகன் - ஊழிமுதல்வனான திருமாலின்; திருவயிறு ஒத்துளது - திருவயிற்றை ஒத்திருக்கிறது; ஆழி அண்டத்தின் - வட்டமான அண்டத்திலுள்ள; அருக்கன்தன் - சூரியனின்; அலங்குதேர் - அசைகின்ற தேரில் பூட்டப்பெற்ற; புரவி ஏழும் அல்லன - ஏழு குதிரைகளைத் தவிர (மற்றைய); குதிரைகள் எல்லாம் - எல்லாக் குதிரைகளும்; ஈண்டுஉள - இங்கே உள்ளன. ஆழி -வட்டம் (12) | 4847.. | தழங்குபேரியின் அரவமும், தகைநெடுங் களிறு முழங்கும் ஓதையும்மூரிநீர் முழக்கொடு முழங்கும்; கொழுங் குழல்புதுக் குதலையர் நூபுரக்குரலின் வழங்குபேர் அருஞ்சதிகளும் வயின்தொறும் மறையும். |
தழங்கு - ஒலிக்கும்; பேரியின் அரவமும் - முரசின் ஒலியும்; தகை நெடுங்களிறு - தகுதிமிக்க யானைகள்; முழங்கும் ஓதையும் - |