| | அற்பின் நார் அறாத சிந்தை அனுமனும், ‘சனகன் பாவை கற்பினால்இயன்றது’ என்பான், பெரியது ஓர் களிப்பன் ஆனான். |
அற்பின் நார்அறாத சிந்தை அனுமனும் - (சீதாராமர்கள்பக்கல்) தான் கொண்டுள்ள பக்தியாகிய பற்று நீங்காத மனத்தை உடைய அனுமனும்; வெம் தீ - அந்தக் கொடிய நெருப்பு; வெற்பினால் இயன்றது அன்ன மேனியை விழுங்கி நிற்பினும் - மலையால் அமைக்கப்பட்டது போன்ற தனது உடலை முழுவதும் கவர்ந்து நின்று எரித்தாலும்; சுடாது நின்ற நீர்மையை நினைவின் நோக்கி - தன்னைச் சுடாது குளிர்ச்சியோடு விளங்கிய தன்மையை தன் மனத்தால் நன்கு ஆராய்ந்து உணர்ந்து; சனகன் பாவை கற்பினால் இயன்றது - ‘சனகனின் மகளாகிய சானகியின் கற்பின் சிறப்பால் ஆனது (இது)’; என்பான் - என்று தீர்மானித்தவனாகி; பெரியது ஓர் களிப்பன் ஆனான் - ஒப்பற்ற பெருங்களிப்பை உடையவன் ஆனான். நெருப்பு தன்னைச்சுடாமல் இருப்பதற்குக் காரணம் பிராட்டியின் கற்புச் சிறப்பே என்று உணர்ந்து அனுமன் மகிழ்ந்தனன் என்க. (131) அனுமன் இலங்கைநகர் முழுதும் காணுதல் | 5936. | அற்றை அவ்இரவில், தான் தன் அறிவினால் முழுதும் உன்னப் பெற்றிலன்எனினும், ஆண்டு, ஒன்று உள்ளது பிழை உறாமே, மற்று உறு பொறிமுன் செல்ல, மறைந்து செல் அறிவு மான, கற்றிலாஅரக்கர் தாமே காட்டலின், தெரிய, கண்டான். |
தான் - அந்த அனுமன்தான்;அற்றை அ இரவில் - பிராட்டியைக் காண ஊர் தேடி வந்த அன்றைத் தினத்து முன்னிரவிலே; தன் அறிவினால் முழுதும் உன்ன பெற்றிலன்எனினும் - தன் அறிவைக் கொண்டுநகர்ப் பகுதிகள்முழுவதையும் ஊன்றி அறியப் பெற்றிலனாயினும்; ஆண்டு உள்ளது ஒன்றுபிழை |