பக்கம் எண் :

பிணி வீட்டு படலம்785

     இலங்கை நகர்முழுவதையும் காணுதல் மூலம், தனது கருத்தை
நிறைவேற்றிக் கொண்ட அனுமன்,திடீரென மேலே எழும்பினான். அப்போது,
அவனைக்கயிற்றொடு பற்றியிருந்த அரக்கர் கூட்டம் கீழே விழுந்தன என்க.
புயத்திற்குஎழு (தூண்) உவமை.                             (133)

விசும்பில்பொலிந்த அனுமன் தோற்றம் 

5938.

இற்ற வாள்அரக்கர் நூறாயிரவரும், இழந்த
                          தோளார்,
முற்றினார் உலந்தார்; ஐயன் மொய்ம்பினோடு
                          உடலை மூழ்கச்
சுற்றிய கயிற்றினோடும் தோன்றுவான், அரவின்
                           சுற்றம்
பற்றிய கலுழன்என்ன, பொலிந்தனன் விசும்பின்
                           பாலான்.

     இற்றவாள்அரக்கர் நூறு ஆயிரவரும் - தனிப்பட்டு விழுந்த
கொடியஅந்த அரக்கர் நூறாயிரம் பேரும்; இழந்த தோளார் முற்றினார்
உலந்தார் -
தோள்களை இழந்தவர்களாய் உயிர் முடிந்து இறந்தார்கள்; ஐயன்
-
அனுமன்;மொய்ம்பினோடு உடலை மூழ்கச் சுற்றிய கயிற்றினோடும் -
தோள்களோடுஉடம்பையும் அழுந்தக் கட்டிய கயிற்றினுடனே; விசும்பின்
பாலான்தோன்றுவான்-
ஆகாயத்திடத்துக் காணப்படுபவனாய்; அரவின்
சுற்றம்பற்றிய கலுழன் என்ன பொலிந்தனன் -
பாம்பின் கூட்டம் பற்றிய
கருடனைப் போல விளங்கினான்.

     கயிறுகளால்கட்டுண்டு வானில் விளங்கிய அனுமனுக்கு, அரவுகளால்
சுற்றப்பட்டு வானில் பறக்கும் கருடன் உவமை. மொய்ம்பு - தோள். ‘பூந்தாது
மொய்ம் பினவாக’ (கலித் தொகை 88:2)                        (134)

அனுமன் தன் வாலைஇலங்கை மீது நீட்டுதல் 

5939.

துன்னலர்புரத்தை முற்றும் சுடு தொழில்
                      தொல்லையோனும்,
பன்னினபொருளும், நாண, ‘பாதகர் இருக்கை பற்ற,
மன்னனைவாழ்த்தி, பின்னை வயங்கு எரி
                      மடுப்பென்’ என்னா,
பொன் நகர்மீதே, தன் போர் வாலினைப் போக
                      விட்டான்.