பக்கம் எண் :

ஊர் தேடு படலம்79

முழங்குகின்றமுழக்கமும்; மூரிநீர் முழக்கொடு - கடலின் முழக்கத்துக்குச்
சமமாக; முழங்கும் - ஒலிக்கும்; கொழும் குழல் - வளமான
புல்லாங்குழல்போல; புதுக்குதலையர் - புதுமையாக மழலைமொழி பேசும்
மகளிர் அணிந்த; நூபுரக் குரலின் -  சிலம்பின் ஓசையினாலே; பேர்
வழங்கும் - 
பெருமை தருகின்ற; அரும் சதிகளும் - அருமையான தாள
ஒத்துக்கள்கூட; வயின்தொறும் - இடங்கள் தோறும்; மறையும் - ஒடுங்கிப்
போகும்.                                                   (13)

4848.

மரகதத்தினும் மற்றுஉள மணியினும் வனைந்த
குரக தத்தடந்தேரினம் அவைபயில் கொட்டில்
இரவி வெள்கநின்று இமைக்கின்ற இயற்கைய
                                என்றால்
நகரம் ஒக்குமால்நல்நெடுந் துறக்கம், இந்நகர்க்கு.

     மரகதத்தினும் -மரகதக்கற்களாலும்; மற்றுள - வேறுவகையாக
உள்ள; மணியினும் - மாணிக்கங்களாலும்; வனைந்த - அமைக்கப்பட்ட;
குரகதத் தடந்தேர் இனம் - குதிரைகளால் இயங்கும் தேர்க்கூட்டமாகிய;
அவைபயில் - அவைகள் தங்கியிருக்கும் தேர்ச்சாலைகள்; இரவி -
சூரியனும்; வெள்க நின்று - நாணம் அடையும்படி இருந்து; இமைக்கின்ற
இயற்கைய -
ஒளிவீசும் தன்மையுடையன; என்றால் - என்று 
கூறப்பெறுமானால்; இந்நகர்க்கு -  இந்த இலங்கைக்கு (ஒப்புக்கூறின்);
நல்நெடும் துறக்கம் - நல்லபெரிய சுவர்க்கம்; நரகம் ஒக்கும் - நரகமே
போன்றிருக்கும்.

     இமைத்தல் - ஒளி வீசுதல்                                (14)

4849.

திருகுவெஞ்சினத்து அரக்கரும் கருநிறம் தீர்ந்தார்;
அருகு போகின்ற திங்களும் மறுஅற்றது;-அழகைப்
பருகும் இந்நகர்த் துன்ஒளி பாய்தலின்;- பசும்பொன்
உருகுகின்றதுபோன்று உளது; உலகுசூழ் உவரி.

     அழகைப் பருகும் -உலகஅழகையெல்லாம் தன்பால் அடக்கும்;
இந்நகர் -
இந்த இலங்கையில்; துன்ஒளி - நிரம்பிய ஒளியானது; பாய்தலின்
-
(எங்கும்) பரவுதலாலே; திருகும் - மாறுபட்ட; வெஞ்சினத்து அரக்கரும் -
கொடுங்கோபத்தை