| | வெடித்த; வேலை வெதும்பிட, மீன் குலம் துடித்து, வெந்து,புலர்ந்து, உயிர் சோர்ந்தவால். |
பொடித்து எழுந்துபோவன பெரும் பொறி - (நெருப்பினின்றும்) சிதறி எழுந்து போவனவாகிய பெரிய தீப்பொறிகள்; இடி குலங்களின் எங்கணும் வீழ்தலின் - இடிக்கூட்டம் போல எல்லா இடங்களிலும் வீழ்ந்த அளவில்; வெடித்த வேலை - வெடி ஓசை போன்ற ஓசையை உடைய கடல்,; வெதும்பிட மீன் குலம் துடித்து - கொதிப்படைய அக்கடலில் உள்ள மீன் கூட்டங்கள் (வெப்பம் தாங்காமல்) துடித்து; வெந்து, புலர்ந்து உயிர் சோர்ந்த- தாபமடைந்து வாடி, உயிர் ஒடுங்கி இறந்தன. நெருப்புப்பொறிகள் எல்லா இடங்களிலும்விழுந்ததனால், கடல் கொதித்தது; அதனால், அங்கிருந்த மீன்குலம் வெப்பம் தாங்காமல், துடிப்புண்டும் வெந்தும் காய்ந்தும் இறந்தன என்பதாம். (10) | 5953. | பருகு தீமடுத்து, உள்ளுறப் பற்றலால், அருகு நீடிய ஆடகத்தாரைகள் உருகி, வேலையின்ஊடு புக்கு உற்றன, திருகு பொன்நெடுந் தண்டின் திரண்டவால். |
பருகு தீ -(தன்னிடம் கிடைப்பன யாவற்றையும்) பருகும் (அழிக்கும்) இயல்பினை உடைய நெருப்பு; மடுத்து - சூழ்ந்து நிறைந்து; உள் உற பற்றலால் - (பொன் மாளிகைகளின்) உள்ளே புகுந்து எரித்தலால்; உருகி அருகு நீடிய ஆடக தாரைகள் - உருகிப் பக்கங்களில் பெருகிய பொன்னின் ஒழுக்குகள்; வேலையின் ஊடுபுக்கு உற்றன - கடலின் அகத்தே புகுந்தவைகளாய்; திருகு பொன் நெடும் தண்டின் திரண்ட - முறுக்குகள் அமைந்த நீண்ட பொற்பாளங்களாக இறுகின. நெருப்பு, மடுத்துபொன்மாளிகையில் புகுந்து எரித்ததால், பொன் ஒழுக்கு, கடலின் நீரில் சேர்ந்து, மறுபடியும் இறுகி பாளங்களாக மாறிற்று. நெருப்பு சூட்டில் உருகிய பொன், தண்ணீரின் குளிர்ச்சியில் இறுகிற்று. தண்டு - கட்டிப்பட்ட பாளம்; திரள்தல். இறுகுதல். (11) | 5954. | உரையின்முந்து உலகு உண்ணும் எரிஅதால், வரை நிவந்தனபல் மணி மாளிகை நிரையும் நீள்நெடுஞ் சோலையும் நிற்குமோ ? தரையும் வெந்தது,பொன் எனும் தன்மையால். |
|