பக்கம் எண் :

இலங்கை எரியூட்டு படலம்795

     உரையின்முந்து உலகு உண்ணும் எரி அதால் - (சான்றோர்)
சுடுமொழியினும் விரைவாக உலகை அழிக்கக் கூடிய நெருப்பானமையால்;
வரை நிவந்தன பல் மணி மாளிகை நிரையும் - மலை போல் உயர்ந்த பல
மணிகளால் இயன்ற மாளிகைகளின் வரிசைகளோடும்; நீள் நெடும்
சோலையும் -
நீண்டுயர்ந்த சோலைகளோடும்; நிற்குமோ - எரிந்து
நிற்குமோ? (நில்லாது); பொன் எனும் தன்மையால் தரையும் வெந்தது -
(அவைநின்ற) நிலமும் பொன் மயமாக இருத்தலினால் வெந்து உருகிவிட்டது.

    இலங்காபுரியிலுள்ள மாளிகையின் தளவரிசைகள் பொன்மயமானதால்,
சோலைகள் எரியும் போதே, தரையும் வெந்து அழிந்தது.              (12)

5955.

கல்லினும்வலிதாம் புகைக் கற்றையால்
எல்லி பெற்றது,இமையவர் நாடு; இயல்
வல்லி கோலிநிவந்தன; மா மணிச்
சில்லியோடும் திரண்டன, தேர் எலாம்.+

     கல்லினும்வலிதாம் புகைக் கற்றையால் - கல்லைக்காட்டிலும்
செறிவுள்ளதான புகைத் தொகுதி பரவிச் சூழ்தலால்; இயல்வல்லி கோலி
நிவந்தன இமையவர் நாடு -
அழகிய கற்பகக் கொடி போன்ற கொடிகள்
சுற்றி உயர்ந்த பொன்மயமான தேவலோகம்; எல்லி பெற்றது - இருள்
அடைந்தது; தேரெலாம் மாமணி சில்லியோடும் திரண்டன - தேர்கள்
எல்லாம் சிறந்த இரத்தினங்களால் இழைக்கப் பெற்ற தம் உருளைகளோடும்
(அத்தீயால் ஒன்றாகச் சேர்ந்து உருகி) ஒரே தொகுதியாக அமைந்தன.

     தேர்கள்பொன்னால் அமைந்தமையால், தீயில் உருகி அவை உறுப்பு
வேறுபாடின்றி ஒன்றாகத் திரண்டன என்க.                       (13)

5956.

பேயமன்றினில் நின்று, பிறங்கு எரி,
மாயர் உண்ட நறவுமடுத்ததால்;
தூயர் என்றிலர்வைகு இடம் துன்னினால்,
தீயர்;அன்றியும், தீமையும் செய்வரால்.

     பிறங்கு எரி பேயமன்றினில் நின்று - விளங்குகின்ற தீயானதுகள்
முதலிய குடிக்கும் பொருள் பொருந்திய சாலையில் புகுந்து; மாயர் உண்ட
நறவு மடுத்தது -
வஞ்சனைத் தொழில் மிக்க அரக்கர் உண்டு எஞ்சிய
கள்ளையும் குடித்தது; தூயர் என்றிலர் வைகு இடம்