பக்கம் எண் :

796சுந்தர காண்டம்

துன்னினால் - பரிசுத்தமானவர்என்று சொல்லத்தகாதவர் இருக்கும் இடத்தை
(தூயவர்) சென்றடைந்தால்; தீயர் அன்றியும் தீமையும் செய்வர் - (தூயவர்)
தீயவராகுவர் அத்தோடு தாமும் தீச் செயல்களைச் செய்பவர்களும்
ஆவார்கள்.

     தூயவர், தீயவர்தங்கும் இடம் சென்றால், தீயவராகி விடுவர். தீய
செயல்களையும் செய்வர். ‘தூயது என்று எவராலும் போற்றப்படும் நெருப்பு,
கட் குடிலைப் பற்றியதனால், அரக்கர் உண்டு எஞ்சிய கள்ளையும் குடித்தது’
என்ற செயலின் மூலம் வாழ்க்கைத் தத்துவம் விளக்கப் படுகின்றது. பேயம் -
கள் முதலிய குடிக்கும் பொருள்; மன்று - இடம். (சாலை) ‘ஆல்’ இரண்டும்
அசைநிலைகள்.                                            (14)

5957.

தழுவு இலங்கை தழங்கு எரி தாய்ச் செல,
வழு இல் வேலைஉலையின் மறுகின;
எழும் எழும்சுடர்க் கற்றை சென்று எய்தலால்,
குழுவு தண் புனல்மேகம் கொதித்தவே.

     இலங்கை தழுவுதழங்கு எரி - இலங்கை நகரைச்சூழ்ந்து ஒலி
முழக்கம் செய்யும் நெருப்பு; தாய் செல - தாவித் தாவி பரந்ததனால்; வழு
இல் வேலை உலையில் மறுகின -
அந் நகரத்தைச் சுற்றியுள்ள குற்றம்
இல்லாத கடல், உலைநீர் போல மிகவும் கொதித்தன; எழும் எழும் சுடர்
கற்றை -
மேலும் மேலும் எழுந்த ஒளித் தொகுதிகள்; சென்று எய்தலால் -
மேலே சென்று வீசுவதால்; குழுவுதண் புனல் மேகம் கொதித்த -
வானத்திலே திரண்டுள்ள குளிர்ச்சியான நீரை உடைய மேகங்களும்
கொதிப்படைந்தன.

     இலங்கையைச்சுற்றியுள்ள கடல் நீரும், அந்நகரின் மீதாக உள்ள மேக
நீரும் அனுமன் வைத்த நெருப்பால் கொதிப்படைந்தன என்க.         (15)

5958.

ஊனில்ஓடும் எரியொடு உயங்குவார்,
‘கானில் ஓடும்நெடும் புனல் காண்’ எனா,
வானில் ஓடும்மகளிர் மயங்கினார்,
வேனில் ஓடு அருந்தேரிடை வீழ்ந்தனர்.*

     ஊனில் ஓடும்எரியொடு  உயங்குவார் - உடல்முழுதும் தீப்பற்றி
எரிய வருந்துபவர்களாய்; வானில் ஓடும் மகளிர் - (தப்பி உய்தற் பொருட்டு)
வானத்தில் எழுந்து ஓடும் அரக்க மாதர்கள்; கானில் ஓடும் நெடும் புனல்
காண் எனா -
காட்டிலே ஓடுகின்ற