நீண்ட ஆற்று வெள்ளமேகாண் என்று; மயங்கினார் - மாறாகக் கருதியவர்களாய்; வேனில் ஓடும் அருந்தேரிடை வீழ்ந்தனர் - வேனிற்காலத்தில் நீர் ஓடுவது போலத் தோன்றும் அரிய பேய்த் தேரிடையே விழுந்தார்கள். நெருப்பு, பற்றியதனால் உடல் வருந்தி, அதனின்றும் உய்வதற்கு வானை நோக்கி மேல் எழுந்த மகளிர், கீழே காணும் வெப்பத்தை, காட்டில் ஓடும் நீர்ப் பெருக்கு என மாறாகக் கருதி, அக்கானல் நீரில் விழுந்தனர். வேனிற் காலத்தில் பரந்த வெளியில் உள்ள சூரிய வெப்பம், நீர்ப் பெருக்கு போன்று தோன்றும். இதற்குக் ‘கானல் நீர்’ என்று பெயர். இதுவே பேய்த்தேர் எனப்படும். (16) | 5959. | தேன்அவாம் பொழில் தீப் பட, சிந்திய சோனைமா மலர்த்தும்பி, ‘தொடர்ந்து, அயல் போன தீச் சுடர்புண்டரிகத் தடங் கானம் ஆம்’ என,வீழ்ந்து, கரிந்தவே.* |
தேன் அவாம்பொழில் - தேன் மிக்க(அந்நகரத்துச்) சோலைகளில்; தீ பட - நெருப்புப் பற்ற (அதனால்); சிந்திய - சிதறிய; சோனைமாமலர் தும்பி - நீருண்ட மேகம் போல மலர்களில் மொய்த்துக் கொண்டிருந்த வண்டுகள்; தொடர்ந்து அயல் போன - அந்தச் சோலைகளைத் தொடர்ந்து அப்பாலும் பரவிச் சென்ற; தீ சுடர் - நெருப்புச் சுடர்களை (கண்டு); புண்டரிகத்தடம் கானம் ஆம் என வீழ்ந்து கரிந்த - பெரிய தாமரைக்காடுஎன்று மாறாகக் கருதி, அவற்றில் போய் விழுந்து கருகிப் போயின. நெருப்புச்சுடரின் மிகுதியான தோற்றத்தை, தாமரைக்காடு என மாறாகக் கருதிய வண்டுகள் அதில் விழுந்து கருகின என்பதாம். (17) | 5960. | ‘நல் கடன்இது; நம் உயிர் நாயகர் மற்கடம் தெறமாண்டனர்; வாழ்வு இலம்; இல் கடந்து இனிஏகலம் யாம்’ எனா, வில் கடந்தநுதல் சிலர் வீடினார்.* |
வில் கடந்தநுதல் சிலர் - வில்லின் வளைவையும்வென்ற நெற்றியை உடைய அரக்க மகளிர் சிலர்; நம் உயிர் நாயகர் - நமது உயிர் போன்ற கணவன்மார்கள்; மற்கடம் தெற மாண்டனர் - ஒரு குரங்கு கொல்ல இறந்து போயினர்; யாம் வாழ்வு இலம் - யாம் மங்கல வாழ்க்கை இல்லாதவரானோம்; இனி இல் கடந்து ஏகலம் |