பக்கம் எண் :

798சுந்தர காண்டம்

- இனிமேல் (கைம்மைநிலையில்) வீட்டைக் கடந்து வெளியில்
செல்லமாட்டோம்; எனா - என்று உறுதி எடுத்துக் கொண்டு; நல் கடன் இது
வீடினார் -
இதுவே நல்ல கடப்பாடு ஆகும் என்று துணிந்து (அந்த
நெருப்பிலே விழுந்து) இறந்தார்கள்.

     சில உத்தமப்பெண்களின் இயல்பு கூறப்பட்டது.              (18)

5961.

பூக்கரிந்து, முறி பொறி ஆய், அடை
நாக் கரிந்து,சினை நறுஞ் சாம்பர் ஆய்,
மீக் கரிந்துநெடும் பணை, வேர் உறக்
காக் கரிந்து,கருங் கரி ஆனவே.

     பூ கரிந்து -மலர்கள்கரிந்து போய்; முறி பொறி ஆய் - இளந்
தளிர்கள் நெருப்புப் பொறியாய்; அடை நாகரிந்து - இலைகளும், இலைகளின்
நடுவில் உள்ள ஈர்க்குகளும் கரியாகி; சினை நறுஞ் சாம்பர் ஆய் மீகரிந்து
-
சிறு கிளைகள் நல்ல சாம்பலாய் வெந்து அதன் மேலுள்ள மற்றப்
பாகங்களும் வெந்து; நெடும் பணை வேர் உற கா கரிந்து - நீண்ட
கிளைகளும், வேர்களும் ஒன்றுபட சோலைகள் முழுவதும் கரிந்து போய்;
கரும் கரி ஆன - பெரிய கரிக்குவியல்களாக ஆயின.

     முறி - இளந்தளிர்; அடை - இலை; நா இலையின் நடுவில் உள்ள
ஈர்க்கு; சினை - சிறுகிளை; நெடும்பணை - பெரிய கிளை; கா - சோலை. (19)

5962.

கார் முழுக்க எழும் கனல் கற்றை போய்
ஊர் முழுக்கவெதுப்ப உருகின;
சோர் ஒழுக்கம்அறாமையின், துன்று பொன்
வேர் விடுப்பதுபோன்றன, விண் எலாம்.*

     கார் முழுக்கஎழும் கனல் கற்றை - மேகங்களை முழுகச்செய்யும்
படிமேலே எழுகின்ற நெருப்பின் தொகுதி; போய் ஊர் முழுக்க
வெதுப்ப  -
மேற் சென்று, (பொன்மயமான) அமராவதி நகரம் முழுவதையும்
சுட்டெரிக்க;உருகின சோர் பொன் ஒழுக்கம் அறாமையின் - (அதனால்)
உருகிஒழுகுகின்ற பொன்னின் தாரைகள் இடைவிடாது பெருகுதலால்; விண்
எலாம்துன்று வேர் விடுப்பது போன்றன -
அவ்வான நாடு முழுவதும்,
அடர்ந்தமரத்தின் வேரைக் கீழே இறங்க விடுவது போன்று விளங்கின.