பக்கம் எண் :

இலங்கை எரியூட்டு படலம்799

     மேகங்கள்முழுகும்படி எழுந்த தீச்சுடர், பொன் மயமான அமராவதி
நகரை எரிக்க, அது உருகியது. உருகிய பொன் ஒழுக்கு, மரத்தின் வேர்கள்
போன்று விளங்கிற்று என்பதாம்.                              (20)

5963.

நெருக்கி மீ மிசை ஓங்கு நெருப்பு அழல்
செருக்கும் வெண்கதிர்த் திங்களைச் சென்று உற
உருக்க,மெய்யின் அமுதம் உகுத்தலால்,
அரக்கரும் சிலர்ஆவி பெற்றார் அரோ.*

     மீமிசை நெருக்கிஓங்கும் நெருப்பு அழல் - மேன்மேலும்
திண்ணியதாக ஓங்கிய நெருப்பின் வெம்மை; செருக்கும் வெண் கதிர்
திங்களை -
களிப்பைத் தரும் வெண்மையான கிரணங்களை உடைய
சந்திரனை; சென்று உற உருக்க - சென்று அடைந்து நன்றாக உருகச் செய்ய,
(அதனால்); மெய்யின் அமுதம் -  அச்சந்திரனின் உடலிலிருந்து;
உகுத்தலால் - அமிர்தம் சிந்துவதால்; அரக்கர் சிலரும் - இறந்த அரக்கரில்
சில பேரும்; ஆவி பெற்றார் - உயிர் பெற்றார்கள்.

     நெருப்பு, சந்திரமண்டலம் சென்று தாக்கியதனால், உருகிய
அமிர்தத்துளி பட்டு, நெருப்பில் வெந்து இறந்த அரக்கர்களில் சிலரும் உயிர்
பெற்று எழுந்தனர் என்பதாம்.                                (21)

5964.

பருதி பற்றி நிமிர்ந்து எழு பைங் கனல்,
கருகி முற்றும்எரிந்து, எழு கார் மழை,
அருகு சுற்றும்இருந்தையதாய், அதின்
உருகுபொன்-திரள் ஒத்தனன், ஒண் கதிர்.*

     பருதி பற்றிநிமிர்ந்து எழு பைங்கனல் - சூரிய மண்டலத்தை
அளாவிஉயர்ந்து எழுந்த அந்தப் புதிய நெருப்பின் வெம்மையால்; எழு கார்
மழைமுற்றும் எரிந்து கருகி -
வானத்தில் செல்லுகின்ற காள மேகங்கள்
முழுவதும்வெந்து கருகி; அருகு சுற்றும் இருந்தை அது ஆய் -
பக்கங்களில்சூழ்ந்திருந்த கரியைப் போல விளங்க; ஒள் கதிர் அதின் உருகு
பொன்திரள் ஒத்தன -
ஒளி தங்கிய சூரியன், அக்கரித்தொகுதியினிடையே
உருகுகின்ற பொற் கட்டியைப் போலத் தோன்றினான்.

     சூரியனிடத்துஉள்ள நெருப்பினும் வேறுபட்டது அனுமன் இலங்கையில்
இட்ட நெருப்பு. அதனால் ‘பைங்கனல்’ எனப்பட்டது, சென்ற பாடலும், இதுவும்
சந்திரன் இருப்பதையும் சூரியன் தோற்றத்