பக்கம் எண் :

80சுந்தர காண்டம்

உடைய அரக்கர்களும்;கருநிறம் தீர்ந்தார் - கரிய நிறம் நீங்கப் பெற்றனர்;
அருகு -
பக்கத்தில்; போகின்ற திங்களும் - செல்கின்ற சந்திரனும்; மறு
அற்றது -
(தன்பால்பெற்ற) களங்கம் நீங்கியது; உலகு சூழ் உவரி - உலகைச்
சுற்றியுள்ள கருங்கடல்; பசும்பொன் -  மாற்றுயர்ந்த பொன்னானது;
உருகுகின்றது போன்று உளது -
உருகி (அலையடிப்பது) போன்றுள்ளது.

     அருகு பேர்கின்றதிங்கள் என்னும் பாடம் சிறக்கும். பேர்கின்ற என்பது
போகின்ற என்றும் படிக்கப்படும். பேர்தல் - நிலை குலைதல். உவரி -
கருங்கடல், பசும்பொன் - மாற்று உயர்ந்த பொன் (புறம் 141).        (15)
 

4850.

அண்டம்முற்றவும் வீங்கு இருள் அகற்றி நின்று
                                 அகல்வான்
கண்ட அத்தனிக்கடிநகர் நெடுமனை; கதிர்கட்கு
உண்டு அவ்ஆற்றல் என்று உரைப்பரிது; ஒப்பிடின்
                                 தம்முள்
விண்டவாய்ச்சிறு மின்மினி என்னவும் விளங்கா.

     அண்டம் முற்றவும்- எல்லாஅண்டங்களிலுமுள்ள; வீங்கு இருள்
அகற்றி நின்று -
நிரம்பிய இருளைப் போக்கிநின்று; அகல்வான்கண்ட -
விரிந்த ஆகாயத்தை அளாவிய; அத்தனிக்கடிநகர் - அந்த காவலுடன் கூடிய
இலங்கையிலுள்ள; நெடுமனை  - பெரிய மாளிகை வீடுகள்; ஆற்றல் -
அந்தப் பெரும் சக்தி; கதிர்கட்கு - (பல இடங்களில் திரியும்) பன்னிரண்டு
சூரியர்களுக்கு; உண்டு என்று உரைப்பரிது - உள்ளது என்று கூறவியலாது;
ஒப்பிடின் - (கதிர்களை நகர மனையுடன்) ஒப்பிட்டுக் கூறினால்; தம்முன் -
தங்கட்கு முன்னே; விண்டவாய் - தோற்றுப் போனவாய்; சிறு - சிறிய;
மின்மினி என்னவும் -
மின்மினியைப் போலக்கூட; விளங்கா - ஒளிவிட்டு
விளங்கா.

    கவிச்சக்கரவர்த்தி புறப்பாட்டைக் கருதினார் போலும் (புறம்5)    (16))

4851.

தேனும்சாந்தமும் மான்மதச் செறிநறுஞ் சேறும்
வான நாள்மலர்க்கற்பக மலர்களும் வயமாத்
தான வாரியும்நீரொடு மடுத்தலின், தழீஇய
மீனும் தானும்ஓர் வெறிமணம் கமழும் அவ்வேலை.