தையும் கூறுகின்றன.அதனால் இந்தக் காலம் பௌர்ணமி என்று அறியலாம். அனுமன் சீதாபிராட்டியைப் பார்த்த காலத்தை ஆராய்வதற்கு உதவும் கவிதைகள் இவை இரண்டும் என்னலாம். இருந்தை - கரி. (22) | 5965. | தளைகொளுத்திய தாவு எரி, தாமணி முளை கொளுத்தி,முகத்திடை மொய்த்த பேர் உளை கொளுத்த,உலந்து உலைவு உற்றன- வளை குளப்பின் மணி நிற வாசியே. |
தளை கொளுத்தியதாவு எரி - (குதிரைகளின்)பின்கால்களைப் பிணைத்திருக்கும் கயிறுகளை எரித்த மேலே தாவி எழும்பிய தீயானது; தாமணி முளை கொளுத்தி - தாமணி என்னும் கழுத்துக் கயிற்றுடன், அக்கயிறு கட்டப்பட்டிருந்த முளைகளையும் எரித்து; முகத்திடை மொய்த்த பேர் உளை கொளுத்த - முகத்தின் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த பெரியபுற மயிர்கள் கொளுத்தப்பட்டு எரிய, (அதனால்); வளைகுளப்பின் மணி நிற வாசி - வளைந்த குளம்பையும் அழகிய நிறத்தையும் உடைய குதிரைகள்; உலந்து உலைவு உற்றன - வாடித்தவித்து அழிந்தன. தளை - விலங்குபோல் காலில் பூட்டப்படும் கயிறு; தாமணி - கழுத்தில் கட்டும் கயி்று; வளைகுளப்பு - வளைந்த கால் குளம்பு; வாசி - குதிரை. குளம்பு என்பது குளப்பு என வலித்தல் விகாரமாக வந்தது. (23) அரக்கரும்அரக்கியரும் உற்ற அவலம் | 5966. | எழுந்துபொன்தலத்து ஏறலின், நீள் புகைக் கொழுந்து சுற்ற,உயிர்ப்பு இலர், கோளும் உற்று அழுந்துபட்டுளர்ஒத்து, அயர்ந்து, ஆர் அழல் விழுந்துமுற்றினர்-கூற்றை விழுங்குவார். |
கூற்றைவிழுங்குவார் - யமனையும் விழுங்கக்கூடியஆற்றல் அமைந்தசில அரக்கர்கள்; எழுந்து பொன் தலத்து ஏறலின் - (அந்த நெருப்புக்குத்தப்பிப் பிழைக்க மேலே) எழுந்து பொன்னுலகமான சுவர்க்கத்துக்கு ஏறும்போது; நீள் புகை கொழுந்து சுற்ற - கொழுந்துவி்ட்டு எழுந்த நீண்ட புகைசுற்றிக் கொண்டதனால்; உயிர்ப்பு இலர் - மூச்சுவிட மாட்டாதவர்களாய்;கோளும் உற்று - அப் புகையையும் உள்ளே கொண்டு விட்டபடியால்;அழுந்து |