சில முத்துகள் பிறப்பதுஉண்டு என்று சொல்லத்தக்க வெண்மையான பற்களை உடைய அரக்கமகளிரும்; நிலவு இலங்கிய துகிலினை நெருப்பு உண - நிலவைப் போன்று வெண்ணறிமாய் விளங்குகின்ற தங்களது ஆடைகளை நெருப்பு எரிக்க; அமுது உக புணரும் கலவியின் கரை கண்டிலர் - இன்பம் சுரக்கத் தம்மில் கூடும் கலவியின்பமாகிய கடலின் கரை காணாதவர்களாய்; கடல் மேல் மண்டினர் - (நெருப்பைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு) கடலில் போய் விழுந்தார்கள். ஊடிய மைந்தரும்மகளி்ரும் ஊடல் தீர்ந்து கூடிய நிலையில், தமது ஆடையை நெருப்பு எரிக்க இன்பம் முடியாத நிலையில் கடலில் போய் விழுந்தார்கள் என்க. ‘புலவியின் கரைகண்டவர் கலவியின் கரை காணாதவராயினார்’ நயம் உணரத்தக்கது. இலவு - இலவம்பூ; முத்து பிறக்கும் இடம் இருபது அதற்கும் மேலாக இலவம்பூவினின் இதழகத்தும் முத்துப் பிறந்துள்ளது என்பது கற்பனை. முத்து, பற்களுக்கும், இலவம்பூ செவ்வாய்க்கும் உவமைகள். (26) | 5969. | பஞ்சரத்தொடு, பசு நிறக் கிளி வெந்து பதைப்ப, அஞ்சனக் கணின்அருவி நீர் முலை முன்றில் அலைப்ப, குஞ்சரத்து அனகொழுநரைத் தழுவுறும் கொதிப்பால், மஞ்சு உறப் புகும்மின் என, புகையிடை மறைந்தார். |
பசுநிறம் கிளி -(தம்வளர்த்த) பசுமை நிறம் உள்ள கிளிகள்; பஞ்சரத்தொடு வெந்து பதைப்ப - (தாம் இருந்த) கூட்டுடனே நெருப்பில் வெந்துதுடிக்க (அதுகண்ட துன்பத்தால்); அஞ்சனம் கணின் அருவி நீர் முலைமுன்றில் அலைப்ப - மைபூசிய கண்களினின்றும் அருவி போலப் பெருகும்நீர், தம்தனங்களின் முகட்டிடத்து விழுந்து வருத்த; குஞ்சரத்து அன கொழுநரை - யானை போன்ற (வலிய பெரிய) தமது கணவன்மார்களை; தழுவுறும் கொதிப்பால் - தழுவிக் கொள்ளக் கருதிய பதைப்பினால்; மஞ்சு உற புகும் மின் என புகையிடை மறைந்தார் - மேகத்தினுள்ளே புகுகின்ற மின்னலைப் போல புகையினுள்ளே மறைந்தார்கள். எரிபுகுந்தமாளிகையில் இருந்த மகளிர்கள், தமது கணவரைப் பின்பற்றி வெளியில் வந்தார்கள். வந்த வேகத்தில் தாம் வளர்த்த கிளிகளின் கூட்டைத் திறந்து விட மறந்தார்கள். திரும்பிப் பார்க்கும் போது, அவைகள் கூட்டோடு வெந்து கிடந்தன. அந்தத் துன்பத்தால் |