முதலிய மீன்கள் வாழும்கடல்கள் (அழிந்தன) போல; அகருவும் நறும் சாந்தமும் முதலிய அனேகம் புகர் இல் நல் மரத்து உறு வெறி - அகில் மரங்களும், நறுமணம் உள்ள சந்தனமரங்களும் முதலான குற்றம் அற்ற சிறந்த பல மரங்களில் பொருந்திய நறுமணம்; உலகு எலாம் போர்ப்ப - உலகம் முழுவதும் வீசிக் கவிந்து கொள்ளுமாறு; நந்தன வனங்கள் - இலங்கையில் இருந்த சிங்காரத் தோட்டங்கள்; வெந்தன - அத்தீயில் வெந்து அழிந்தன. கால முடிவில்,காலக் கொடுந்தீயால், கடல் நீர் வற்றி அழிவது போல, அனுமன் வைத்த தீயால், இலங்கை நகரத்துப் பூந்தோட்டங்கள் அழிந்தன என்பதாம். அகர் - அகில்; புகர் - குற்றம்; வெறி - மணம்; போர்ப்ப - மூட.. (29) | 5972. | மினைப்பரந்து எழு கொழுஞ் சுடர் உலகு எலாம் விழுங்கி, நினைவு அரும்பெருந் திசை உற விரிகின்ற நிலையால், சினைப்பரந்து எரி சேர்ந்திலா நின்றவும், சில வெங் கனல் பரந்தவும்,தெரிகில-கற்பகக் கானம். |
மினை பரந்து எழுகொழும் சுடர் - மின்னலைப் போல ஒளிபரவி எழும் செழுமையான அனல் கொழுந்து; உலகு எலாம் விழுங்கி - உலகம் முழுவதையும் தன்னுள் அடக்கிக் கொண்டு; நினைப்பு அரும் பெரும் திசை உற - நினைப்பதற்கு அரிய பெரிய திசைகளைப் போய் அடைய; விரிகின்ற நிலையால் - பரந்து விளங்கும் தன்மையால்; கற்பகம் கானம் வெங்கனல் பரந்த சிலவும் - கற்பகச் சோலைகள் கொடிய நெருப்புப் பற்றி எரிகின்றவை இவை சில என்றும்; சினை பரந்து எரி சேர்ந்திலா நின்ற சிலவும் - கிளைகளில் தாவி நெருப்புப் பற்றாது நின்றவை இவை சில என்றும்; தெரிகில - வேறுபாடு அறிய வொண்ணாதனவாயிருந்தன. இலங்கையில் இருந்தகற்பகச் சோலைகள் இயற்கையில் ஒளியுடைமையால்அனுமன் இட்ட தீயால் எரிந்தவை இவை என்றும் எரியாதவை இவை என்றும்அறிந்து கொள்ள முடியாதபடி விளங்கின என்பதாம். போந்து - போல;சினைப் பரந்து- கிளைகளில் தாவி. (30) |