பக்கம் எண் :

806சுந்தர காண்டம்

     புகை சூழ்ந்த பின்னர்,இயற்கையாக வெண்ணிறமாய் உள்ள சிறந்தவை
அனைத்தும் கருநிறத்ததாயின என்பதாம்.                        (32)

கனலுக்குப் பயந்துகடலில் வீழ்தல்

5975.

கரிந்துசிந்திடக் கடுங் கனல் தொடர்ந்து உடல்
                           கதுவ,
உரிந்தமெய்யினர், ஓடினர், நீரிடை ஒளிப்பார்,
விரிந்தகூந்தலும், குஞ்சியும் மிடைதலின், தாமும்
எரிந்து வேகின்றஒத்தன, எறி திரைப் பரவை.

     கரிந்து சிந்திடகடுங்கனல் தொடர்ந்து உடல் கதுவ - கருகி
உதிர்ந்து போகும்படி கொடிய நெருப்பு தொடர்ந்து அரக்கர்களது உடல்களைப்
பற்றலும்; உரிந்த மெய்யினர் ஓடினர் நீரிடை ஒளிப்பார் - (அதனால்)
தோல் உரியப் பெற்ற உடலினராய் ஓடிப் போய் (வெப்பம் தணிவதற்காக)
கடல் நீரில் முழ்கி மறைந்து கொண்டவர்களாயினர்; விரிந்த கூந்தலும்
குஞ்சியும் மிடைதலின் -
(அரக்கரின் பெண்டிர் ஆடவர் என்ற
இருபாலாரின்) விரிந்த தலைமயிரும் (அக்கடலில்) மிகுந்து நிறைந்தமையால்;
எறி திரை பரவை தாமும் எரிந்து வேகின்ற ஒத்தன -
வீசும் அலைகளை
உடைய கடல்களும் தீப்பட்டு, வேகின்றவை போன்றன.

    அரக்கர்களின்தலைமயிர் செம்பட்டையாதலின், கடற்பரப்பில் அவை
நெருங்கித் தோன்றியது. கடல் தீப்பற்றியது போல் காணப்பட்டது என்பது
கற்பனை.                                              (33)

5976.

மருங்கின்மேல் ஒரு மகவு கொண்டு, ஒரு தனி
                           மகவை
அருங் கையால்பற்றி, மற்றொரு மகவு பின் அரற்ற,
நெருங்கினாரொடுநெறி குழல் சுறுக் கொள நீங்கிக்
கருங் கடல்தலைவீழ்ந்தனர், அரக்கியர் கதறி.

     மருங்கின் மேல்ஒரு மகவு கொண்டு - இடையில் ஒரு குழந்தையை
வைத்துக் கொண்டு; ஒரு தனி மகவை அரும் கையால் பற்றி - மற்றொரு
சிறு குழந்தையை தன் அரிய கையால் பற்றிக் கொண்டு; மற்றொரு மகவு
பின்அரற்ற -
வேறொரு குழந்தை பின்னே அழுது கொண்டு வர;
அரக்கியர் -
அரக்கிமார்கள்; நெருங்கினாரொடு - நெருங்கிய
சுற்றத்தினரோடு; நீங்கி -தமது இடம் விட்டுச் சென்று, நெறி குழல் சுறுக்
கொள -
நெறித்த