பக்கம் எண் :

இலங்கை எரியூட்டு படலம்809

அடைந்தவர்களைப்போல; பறவை வெருளும் வெம் புகை படலையின்
மேல் செல வெருவி -
பறவைகள் அச்சத்தை உண்டாக்கும் கொடிய புகைக்
கூட்டத்தைக் கடந்து அப்பால் செல்ல அஞ்சினவைகளாய்; இருளும்
வெங்கடல் விழுந்தன -
கருநிறம் கொண்ட கொடிய கடலில் விழுந்து;
எழுந்தில -
மேற்கிளப்ப முடியாது; மருளின் மீன் கணம் விழுங்கிட -
அஞ்ச வேண்டிய அப் பறவைகளுக்கு அஞ்சுதல் இல்லாத மீன் கூட்டம்
விழுங்க இறந்து அழிந்தன.

பகைவர்க்குப்பயந்து ஓடி வஞ்சகரைச் சரணம் அடைந்தவர், புகைக்குப்
பயந்து கடலில் விழுந்த பறவைகளுக்கும், வஞ்சகர்கள் கடலுக்கும்
மீன்களுக்கும் உவமைகள். ‘பிறரிடம் அச்சம் கொண்டு வஞ்சரைத் தஞ்சம்
அடைபவர், அவரால் பாதுகாக்கப் படாததோடன்றிதம் நலம் கருதி ஒழிக்கவும்
படுவர்’ என்ற உண்மை உணர்த்தப்பட்டது. (37)

இராவணன் மனையி்ல்தீப்பற்றுதல்

5980.

நீரைவற்றிடப் பருகி, மா நெடு நிலம் தடவி,
தாருவைச் சுட்டு,மலைகளைத் தழல்செய்து, தனி மா
மேருவைப் பற்றிஎரிகின்ற கால வெங் கனல்போல்,
ஊரை முற்றுவித்து,இராவணன் மனை புக்கது-
                                                  உயர் தீ.

உயர் தீ -உயர்ந்துஎழுந்த அந்த நெருப்பு; நீரை வற்றிட பருகி -
கடல், குளம் முதலிய எல்லா நீர்நிலைகளும் வற்றிப் போகும் படி உறி்ஞ்சி;
மாநெடுநிலம் தடவி -
பெரிய நீண்ட நிலம் முழுவதும் பரந்து அழித்து;
தாருவை சுட்டு -
அங்குள்ள மரங்களை எரித்து; மலைகளை தழல் செய்து
-
மலைகளைத் தணல் போல விளங்கும்படி வேகச் செய்து; தனி மா
மேருவை பற்றி எரிகின்ற கால வெம் கனல் போல் -
ஒப்பற்ற மகா மேரு
மலை என்னும் மலையைப் பற்றி எரிகின்ற வெவ்விய கற்பாந்த காலத்து
அக்கினி போன்று; ஊரை முற்றுவி்த்து - அந்த இலங்கை நகர் முழுவதையும்
எரித்துவிட்டு; இராவணன் மனை புக்கது - இராவணனுடைய
அரண்மனையுள் புகுந்தது.

ஊழிக் காலத்துநெருப்பு, சுற்றிலும் எரித்த பின்பு, நடுவில் உள்ள
மேருமலையில் புகுவது போல, அனுமன் இட்ட தீ, இலங்கை நகர் முழு