பக்கம் எண் :

810சுந்தர காண்டம்

வதையும் எரித்த பிறகு,இடையில் உள்ள இராவணன் மாளிகையில் புக்கது
என்பதாம்.                                                 (38)

5981.

வான மாதரும், மற்றுள மகளிரும், மறுகிப்
போன போன திக்கு அறிகிலர், அனைவரும் 
                                  போனார்;
ஏனை நின்றவர்எங்கணும் இரிந்தனர்; இலங்கைக்
கோன் அவ்வானவர் பதி கொண்ட நாள் எனக்
                                 குலைந்தார்.

     வான மாதரும் -இராவணன்மாளிகையில் இருந்த தேவ மகளிரும்;
மற்றுள மகளிரும் -
மற்றும் உள்ள (இயக்க கந்தருவ வித்தியாதரர் முதலான)
பெண்களும்; அனைவரும் மறுகி - எல்லோரும் கலங்கி; போன போன
திக்கு அறிகிலர் போனார் -
அவரவர் போன திசை இன்னது என்று
அறியாதவர்களாய் நிலை கெட்டுச் சென்றனர்; ஏனை நின்றவர் எங்கணும்
இரிந்தனர் -
மற்றும் ஓடாமல் நின்றவர்கள் எங்கும் சுற்றித் திரிந்தவர்களாய்;
இலங்கை கோன் -
இலங்கைக்கு அரசனான இராவணன்; அவ்வானவர் பதி
கொண்ட நாள் என குலைந்தார் -
அந்தத் தேவர்களது தலைநகராகிய
அமராவதியைப் பற்றிக் கொண்ட நாள் போல நிலை குலைந்தார்கள்.

     இராவணனதுமாளிகையைத் தீப்பற்றிய போது அங்கிருந்தவர்கள், பயந்து
ஓடியது பற்றிக் கூறப்பட்டது. மேக நாதன் செயல் தகப்பன் இராவணன் மேல்
ஏற்றிக் கூறப்பட்டது.                                       (39)

5982.

நாவியும்,நறுங் கலவையும், கற்பகம் நக்க
பூவும், ஆரமும்,அகிலும் என்று இனையன புகைய,
தேவு தேன் மழைசெறி பெருங் குலம் எனத் 
                           திசையின்
பாவைமார் நறுங்குழல்களும், பரிமளம் கமழ்ந்த.

     நாவியும் -(இராவணன்மாளிகையில் இருந்த) கத்தூரியும்; நறும்
கலவையும் -
வாசனை உடைய (குங்குமப் பூ முதலிய) கலப்புக்கு உரிய
பொருள்களும்; கற்பகம் நக்க பூவும் - கற்பக மரங்களில் மலர்ந்த
மலர்களும்; ஆரமும் - சந்தனமும்; அகிலும் - அகில் கட்டைகளும்; என்று
இனையன -
என்று சொல்லத்தக்க இவ்விதமான வாசனைப் பொருள்கள்
எல்லாம்; புகைய - எரிந்து