பக்கம் எண் :

இலங்கை எரியூட்டு படலம்811

புகையாக, (அதனால்);திசையின் பாவை மார் நறுங்குழல்களும் பரிமளம்
தேன் மழை செறி தேவு பெரும் குலம் என கமழ்ந்த -
எட்டுத்
திக்குகளைக் காக்கும் தெய்வமகளிரது இயற்கை மணம் கமழும் கூந்தல்களும்
செயற்கை நறுமணம் பெற்று தேன்மழை பொழிகின்ற தெய்வத்தன்மை உடைய
பெரிய மேகக் கூட்டம் போலத் தோன்றி மணம் வீசின.

     இயற்கைமணத்தோடு செயற்கை மணமும் கமழும் திசைக்காவல்
மகளிரது கூந்தலுக்கு, தேன் மழை பொழியும் மேகக் கூட்டம் உவமை
ஆயிற்று. பரிமளம் மணம்.                                    (40)

5983.

சூழும் வெஞ்சுடர் தொடர்ந்திட, யாவரும் தொடரா
ஆழி வெஞ்சினத்து ஆண் தொழில் இராவணன்
                                  மனையில்-
ஊழி வெங் கனல்உண்டிட, உலகம் என்று உயர்ந்த
ஏழும்வெந்தென-எரிந்தன, நெடு நிலை ஏழும்.

     சூழும் வெம் சுடர்தொடர்ந்திட - எங்கும் சூழ்ந்த கொடிய
நெருப்புச்சுடர், போய்த் தாவியதனால்; யாவரும் தொடரா ஆழி வெம்
சினத்துஆண் தொழில் இராவணன் -
எவரும் அணுகமுடியாத கடல்
போன்றகொடிய கோபத்தையும், வீரச் செயலையும் உடைய இராவணனது;
மனையின்நெடு நிலை ஏழும் உலகம் என்று உயர்ந்த ஏழும் -
மாளிகையின் நீண்டுஉயர்ந்த ஏழு நிலை மாடங்களும், ஒன்றன் மேல் ஒன்றாக
உயர்ந்துள்ள,உலகம் என்று சொல்லப்படுகின்ற ஏழு இடங்களும்;
ஊழிவெம்கனல் உண்டிடவெந்து என எரிந்தன -
யுகாந்த காலத்துக்
கொடிய நெருப்பு உண்ணஎரிந்தாற் போன்றனவாய் வெந்து அழிந்தன.

      ஊழித்தீயில்மேலுலகங்கள் ஏழும் எரிந்து அழிந்தது போன்று,
இராவணனது மாளிகையின் எழு நிலை மாடங்களும் எரிந்து அழிந்தன
என்பதாம்.                                                (41)

5984.

பொன் திருத்தியது ஆதலால், இராவணன் புரை தீர்
குன்றம் ஒத்துஉயர் தட நெடு மா நிலைக் கோயில்,
நின்று துற்று எரிபருகிட, நெகிழ்வுற உருகி,
தென் திசைக்கும்ஓர் மேரு உண்டாம் என, தெரிந்த.

     இராவணன் -இராவணனுடைய; குன்றம் ஒத்து உயர் தட நெடு
மாநிலை கோயில் -
மலை போல் உயர்ந்ததும், அகன்ற நீண்ட