பக்கம் எண் :

இலங்கை எரியூட்டு படலம்813

இராவணன் நகர்எரிந்த காரணம் வினவுதல் 

5986.

ஆழித்தேரவன் அரக்கரை அழல் எழ நோக்கி,
‘ஏழுக்கு ஏழ் எனஅடுக்கிய உலகங்கள் எரியும்
ஊழிக் காலம்வந்து உற்றதோ ? பிறிது வேறு
                                உண்டோ ?
பாழித் தீச் சுடவெந்தது என், நகர் ?’ எனப்
                                பகர்ந்தான்.

     ஆழித் தேரவன் -ஆணைச்சக்கரத்தை உடையவனாய்ப் பெருந்தேர்
வீரனான  இராவணன்; அரக்கரை அழல் எழ நோக்கி - தன்னுடன் வந்த
அரக்கர்களைத் தன்கண்களில் கோபத் தீ பொங்கும் படிப் பார்த்து; ஏழுக்கு
ஏழ் என அடுக்கிய உலகங்கள் -
(பதினான்காக) ஒன்றன் மீது ஒன்று என
ஏழொடு ஏழாக அடுக்கப் பெற்ற உலகங்கள்; எரியும் ஊழிக்காலம் வந்து
உற்றதோ ? பிறிது வேறு உண்டோ ? -
எரியும் கற்பாந்த காலம் வந்து
சேர்ந்ததோ ? வேறு ஏதேனும் உண்டாயிற்றோ ? பாழி தீ சுட நகர்
வெந்ததுஎன் ? -
பெரு நெருப்பு எரித்ததால், இந்த இலங்கை நகர்
வெந்ததற்குக்காரணம் என்ன; என பகர்ந்தான் - என்று கேட்டான்.

     ஊழிக்காலத்தில்பதினான்கு உலகங்களும் தீயினால் அழியும். அந்த
ஊழிக்காலம் வந்து விட்டதா? அல்லது இலங்கை வெந்து அழிவதற்கு வேறு
காரணம் உண்டா? என்று இராவணன் அரக்கரைப் பார்த்துக் கேட்டான்.
ஏழுக்கு ஏழ் - பதினான்கு. பாழி - பெருமை. ‘பாழியந் தோளால் வரை
எடுத்தான்’ - (திருவாய் மொழி 10. 4. 8)                       (44)

அரக்கர்நிகழ்ந்தது கூற இராவணன் சினத்தல் 

5987.

கரங்கள்கூப்பினர், தம் கிளை திருவொடும்
                          காணார்,
இரங்குகின்ற வல்அரக்கர் ஈது இயம்பின்;
                          ‘இறையோய் !
தரங்க வேலையின்நெடிய தன் வால் இட்ட தழலால்,
குரங்கு சுட்டதுஈது’ என்றலும், இராவணன்
                          கொதித்தான்.