பக்கம் எண் :

இலங்கை எரியூட்டு படலம்815

எரியையும்அனுமனையும் பற்றி வர இராவணன் கட்டளை இடுதல் 

வஞ்சித் துறை 

5989.

‘உண்டநெருப்பைக்
கண்டனர்பற்றிக்
கொண்டு அணைக’என்றான்-
அண்டரைவென்றான்.

     அண்டரைவென்றான் - முன்பு தேவர்களைவென்றவனான
இராவணன்; உண்ட நெருப்பை - இலங்கையை எரித்த அக்கினித்தேவனை;
கண்டனர் பற்றி கொண்டு அணைக என்றான் -
பார்த்தவர்கள் பிடித்துக்
கொண்டு இங்கே வருவீர்களாக என்று ஆணையிட்டான்.

     இராவணன் ஆணைக்குஅஞ்சியிருந்த அக்கினி தேவன், இப்போது,
ஆணையை  மீறிச் செயல்பட்டதனால், அவனைத் தண்டிக்க வேண்டி,
பிடித்துக் கொண்டு வருமாறு அரக்கர்களுக்குக் கட்டளையிட்டான் என்பதாம்.
                                                          (47)

5990.

‘உற்றுஅகலாமுன்.
செற்ற குரங்கைப்
பற்றுமின்’என்றான்-
முற்றும்முனிந்தான்.

     முற்றும்முனிந்தான் - முழுவதும் சினந்தவனானஇராவணன்; செற்ற
குரங்கை -
இவ்வாறு தீங்கு இழைத்த குரங்கை; உற்று அகலாமுன் - அது,
நம் ஊரைவிட்டு நீங்குவதற்கு முன்பாக; பற்றுமின் - பிடித்து வாருங்கள்;
என்றான் -
என்று கட்டளையிட்டான்.                          (48)

5991.

சார் அயல்நின்றான்,
வீரர்விரைந்தார்;
‘நேருதும்’ என்றார்;
தேரினர்சென்றார்.

     சார் அயல்நின்றார் - இராவணனைச் சார்ந்துபக்கத்தில்
நின்றவர்களாகிய; தேரினர் வீரர் நேருதும் என்றார் - தேர்வீரர்கள்