அவ்வாறே செய்வோம்என்று சொல்லி; விரைந்தார் - விரைந்து சென்றார்கள். நேருதல் - உடன்படுதல். (49) 5992. | எல்லைஇகந்தார் வில்லர்;வெகுண்டார் பல் அதிகாரத் தொல்லர்,தொடர்ந்தார். |
எல்லை இகந்தார்- அளவற்றவில் வீரர்களும்; வில்லர் -; பல் அதிகார தொல்லர் - பழமையான பல்வகையான அதிகாரங்களை உடையவர்களும்; வெகுண்டார் - கோபங்கொண்டு; தொடர்ந்தார் - தேர் வீரர்களைத் தொடர்ந்து சென்றார்கள். (50) வஞ்சி விருத்தம் 5993. | நீர் கெழுவேலை நிமிர்ந்தார்; தார் கெழு தானைசமைந்தார்;- போர் கெழு மாலைபுனைந்தார் ஓர் எழுவீரர்-உயர்ந்தார். |
உயர்ந்தார் ஓர்எழு வீரர் - (அவ்வீரர்களுள்)உயர்ந்தவர்களாகிய ஒப்பற்ற ஏழுவீரர்கள்; நீர் கெழு வேலை நிமிர்ந்தார் - நீர்மிகும் கடல் போல எழுந்தவர்களாய்; போர் கெழு மாலை புனைந்தார் - போர்க்குரிய தும்பை மாலை அணிந்து; தார் கெழு தானை சமைந்தார் - அணிவகுக்கப் பெற்ற சேனையை ஆயத்தம் செய்தார்கள். (51) 5994. | விண்ணினை,வேலை விளிம்பு ஆர் மண்ணினை, ஓடிவளைந்தார்; அண்ணலை நாடிஅணைந்தார்; கண்ணினின் வேறுஅயல் கண்டார். |
விண்ணினை -வானத்தையும்; வேலை விளிம்பு ஆர் மண்ணினை -கடலின் விளம்பிலே (ஓரத்திலே) பொருந்தியுள்ள இலங்கைப் பூமியையும்; ஓடிவளைந்தார் - ஓடிச் சென்று சூழ்ந்து |