கொண்டவர்களாய்;அண்ணலை நாடி அணைந்தார் - பெரியோனாகிய அனுமனைத் தேடி நெருங்கி; அயல் வேறு கண்ணினின் கண்டார் - ஒரு பக்கத்தில் (அனுமனை) தனியே (தமது) கண்களால் பார்த்தார்கள். (52) அரக்கர்கள்அனுமனுடன் பொருது அழிதல் 5995. | ‘பற்றுதிர்! பற்றுதிர் !’ என்பார்; ‘எற்றுதிர் !எற்றுதிர் ! என்பார்; முற்றினர்,முற்றும் முனிந்தார்; கற்று உணர்மாருதி கண்டான். |
முற்றும்முனிந்தார் - மிக்க கோபம் கொண்டஅந்த அரக்கர்கள்; பற்றுதிர் பற்றுதிர் என்பார் - (அனுமனைக் கண்டவுடன்) ‘இவனைப் பிடித்துக் கொள்ளுங்கள் பிடியுங்கள்’ என்று சொல்பவரும்; எற்றுதிர் எற்றுதிர் என்பார் - ‘இவனைத் தாக்குங்கள் தாக்குங்கள்’ என்று சொல்பவர்களுமாய்; முற்றினர் - அனுமனை வளைந்து கொண்டார்கள்; கற்று உணர் மாருதி கண்டான் - நூல்களைக் கற்று உணர்ந்த அறிஞனான அனுமன் அவர்களைப் பார்த்தான். (53) 5996. | ஏல்கொடுவஞ்சர் எதிர்ந்தார்; கால்கொடுகைகொடு, கார்போல், வேல்கொடுகோலினர்; வெந் தீ வால்கொடு தானும்வளைந்தான். |
ஏல் கொடுவஞ்சர் - (அனுமனைப்பிடிப்பதற்கு) ஏற்றுக் கொண்டு வந்த வஞ்சகர்களான அரக்கர்கள்; கார் போல் கோலினர் - மேகம் போல் அனுமனைச் சூழ்ந்து கொண்டு; கால் கொடு, கை கொடு வேல் கொடு - காலைக் கொண்டும் கையைக் கொண்டும் வேலைக் கொண்டும்; எதிர்ந்தார் தானும் - எதிர்த்தார்கள்; அனுமனும்; வெம்தீ வால் கொடு வளைந்தான் - வெவ்விய நெருப்பு மூண்ட தனது வாலைக் கொண்டு அவர்களை வளைத்தான். ஏல் கொடு -ஏற்றுக்கொண்டு. (54) 5997. | பாதவம்ஒன்று பகுத்தான்; மாதிரம் வாலின்வளைத்தான்; |
|