| 4853. | வானும் நிலனும் பெறுமாறு, இனி மற்றும் உண்டோ--- கானும்பொழிலும், இவைசெங் கனகத்தினாலும் ஏனைம் மணியாலும்இயற்றிய வேனும், யாவும் தேனும் மலரும்கனியும் தரச்செய்த செய்கை ? * |
கானும் பொழிலும்இவை - காடுகளும் சோலைகளும் ஆகிய இப்பொருள்கள்; செம் கனகத்தினாலும் - செந்நிறமுடைய பொன்னாலும்; ஏனைய மணியாலும் - மற்றமணியாலும்; இயற்றியவேனும் - செய்யப்பெற்றிருந்தாலும்; யாவும் - (செயற்கையாக அங்கே உள்ள) எல்லாமரங்களும்; தேனும் - தேனையும்; மலரும் - மலரையும்; கனியும் - பழங்களையும்; தர - வழங்கும்படி; செய்த செய்கை - அமைத்த வினைத்திட்பத்தை; வானும் - விண்ணுலகமும்; நிலமும் - மண்ணுலகமும்; பெறும் ஆறு - அடையும் வழிகள் (தவத்தைத்தவிர); இனிமற்றும் உண்டோ - இனி வேறும் உள்ளதா. மற்றும் உண்டோஎன்பதில் உள்ள உம்மை, அசை. காமக்கடல் மற்றும் உண்டோ - என்னும் குறளில் பரிமேல் அழகர் ‘உம்’ அசை என்பார். பெறும் ஆறு மற்றுண்டோ எனச் சேர்க்க. பெறும் வகை உண்டோ என்றும் (வை.மு.கோ). பெறும் வழி வேறு எங்கேனும் உண்டோ (அடை - பதி) என்றும் கூறப்பெறும். (19) தவத்தை வியந்தது | 4854. | நீரும் வையமும் நெருப்பும் மேல்நிமிர் நெடுங்காலும் வாரி வானமும்வழங்கல ஆகும். தம் வளர்ச்சி ஊரின் இந்நெடுங்கோபுரத்து உயர்ச்சிகண்டு உணர்ந்தால் மேரு எங்ஙனம்விளர்க்குமோ, முழுமுற்றும் வெள்கி ? |
ஊரின் - இந்த இலங்கைமாநகரின்; இ - இந்த; நெடுங்கோபுரத்து - நீண்ட கோபுரத்தினுடைய; உயர்ச்சி கண்டு உணர்ந்தால் - வளர்ச்சியைப் பார்த்து அறிந்தால்; (அறிஞர்களால்) நீரும் வையமும் நெருப்பும் - தண்ணீரும் மண்ணும் தீயும்; மேல்நிமிர் - மேல்நோக்கி வீசும்; நெடுங்காலும் - பெருங்காற்றும் என்று கூறப்பெற்ற பூதங்களின்; வாரிவானமும் - பெரும்பரப்பையுடைய ஆகாயமும்; தம் வளர்ச்சி - சிறப்புக்கள்; வழங்கல ஆகும் - கொண்டாடப்படாமல் போகும்; (இதையறிந்தால்) மேரு- |