| ‘சென்றது முதலா,வந்தது இறுதியாச் செப்பற்பாலை, வன் திறல்உரவோய் !’ என்ன, சொல்லுவான் மருத்தின் மைந்தன்: |
என்றலும் -என்று(அனுமன்) கூறியவுடன்; எழுந்தனர் - (வானர வீரர்கள் அனைவரும்) எழுந்து நின்றவர்களாய்; கரங்கள் கூப்பி இறைஞ்சி தாழ்ந்து நின்றனர் - தம் கைகளைக் குவித்து, வணங்கித் தாழ்ந்துநின்று; உவகை பொங்க விம்மலால் நிமிர்ந்த நெஞ்சர் - மகிழ்ச்சி மேலிட பூரிப்பால் நிமிர்ந்து (ஊக்கம் கொண்ட) மன முடையவர்களாய்; வல் திறல் உரவோய் ! - (அனுமனை நோக்கி) மிக்க வலிமை உடையவனே !; சென்றது முதலா வந்தது இறுதியா செப்பல் பாலை என்ன - நீ இங்கிருந்து போனது முதலாக, இப்பொழுது இங்கு வந்து சேர்ந்தது முடிவாக, (நடந்ததை) இங்குச் சொல்வாயாக என்று கேட்டுக் கொள்ள; மருத்தின் மைந்தன் சொல்லுவான் -வாயு தேவனின் மகனான அனுமன் (பின்வருமாறு) சொல்லுவானாயினான். (8) 6015. | ஆண்தகைதேவி உள்ளத்து அருந் தவம் அமையச் சொல்லி, பூண்ட பேர்அடையாளம் கைக் கொண்டதும் புகன்று, போரில் நீண்ட வாள்அரக்கரோடு நிகழ்ந்ததும், நெருப்புச் சிந்தி மீண்டதும்,விளம்பான்-தான் தன் வென்றியை உரைப்ப வெள்கி. |
ஆண்தகை -ஆண்மைக்குணம் நிறைந்த அனுமன்; தேவி உள்ளத்து அருந்தவம் - பிராட்டியின் மனத்தில் உள்ள அரிய தவமாகிய கற்பொழுக்கத்தை; அமைய சொல்லி - (அவர்களுக்கு விளங்கும்படித்) தெளிவாகச் சொல்லி; பூண்ட பேர் அடையாளம் கைக் கொண்டதும் புகன்று - (பிராட்டி) அணிந்திருந்த (சூடாமணியாகிய) பெரிய அடையாளத்தைக் கையில் பெற்று வந்ததையும் சொல்லி; தன் வென்றியை தான் உரைப்ப வெள்கி - தனது வெற்றிச் சிறப்பைத் தானே சொல்ல வெட்கப்பட்டு; போரில் நீண்ட வாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் - யுத்தத்தில் நெடிய வாள்களை உடைய அரக்கர்களுடன் நடந்த செய்தியையும்; நெருப்பு சிந்தி மீண்டதும் - (இலங்கை முழுவதிலும்) |