பக்கம் எண் :

ஊர் தேடு படலம்83

மகாமேரு மலையானது; முழுமுற்றும் வெள்கி - (தன்னுடைய) உடல்
முழுவதும் நாணத்தால் சுருங்கி; எங்ஙனம் விளர்க்குமோ - எப்படி
வெளுத்துப் போகுமோ.

     வையம் -பிருதிவி (மண்) வழங்குதல் - கொண்டாடப்படுதல். ‘வழங்கு
தாரவன்’ என்னும் தேவரின் தொடருக்கு நச்சர் உலகம் கொண்டாடப்படுதலின்
வழங்குதாரவன் என்றார், என விளக்கினார். (சிந்-2504) அவற்றின் வளர்ச்சி
வழக்கு வீழ்ந்தனவாகும் என்றும் கூறலாம்.                     (20)

4855.

முன்னம்யாவரும் ‘இராவணன் முனியும் என்று
                                  எண்ணி
பொன்னின்மாநகர் மீச்செலான்கதிர்’ எனப்
                                 புகல்வார்-
கன்னி ஆரையின்ஒளியினில் கண்வழுக்குறுதல்
உன்னிநாள்தொறும் விலங்கினன் போதலை
                                 உணரார்.

     முன்னம் -முன்பு; யாவரும் - எல்லாப் புலவர்களும்; கதிர் -
(ஆயிரம்) கதிர்களையுடைய சூரியன்;  இராவணன் - (அழப்பண்ணும்)
இராவணன்; முனியும் என்று எண்ணி - கோபிப்பான்  என்று பயந்து
கொண்டு; பொன்னின் மாநகர் மீ - பொன்மயமான இலங்கைக்கு மேலே;
செலான் - போக மாட்டான்; எனப்புகல்வர் - என்று கூறுவார்கள்;
(அவர்கள்)  கன்னி ஆரையின் - பிறரால் பற்றப்படாத மதில்களின்;
ஒளியினில் - பிரகாசத்தாலே; கண் வழுக்குறுதல் உன்னி - கண் கூசுதலை
நினைந்து (சூரியன்); நாள்தொறும் - தினந்தோறும்; விலங்கினன் போதலை
-
விலகிச் செல்வதை; உணரார் - அறியார்.

     கதிர் -சூரியன். உணரார், புகல்வார் என்க. பிறரால் பற்றப்படாதவள்
கன்னி. அதுபோன்ற மதில். காவலில் கலையூர் கன்னியை ஒக்கும் (பால-
அயோ - 9)                       

     இருசுடர் வழங்காப்பெருமூதிலங்கை (ஆசிரிய மாலை)        (21)

4856.

தீயசெய்குநர் தேவரால்; அனையவர்சேரும்
வாயில் இல்லதுஓர்வரம்பு அமைக்குவென் என
                                     மதியா