பக்கம் எண் :

830சுந்தர காண்டம்

நெருப்பைவைத்து விட்டுமீண்டு வந்த செய்தியையும்; விளம்பான் -
சொல்லாமல் விட்டு விட்டான்.

     தற்புகழ்ச்சிசெய்தல் மேன்மைக்கு இழுக்காம் ஆதலால், அரக்கரோடு
நிகழ்ந்த போர்ச் செய்தியையும், இலங்கையில் நெருப்பு வைத்ததையும்
அனுமன் சொல்லவில்லை.                                   (9)

பிறவற்றைக்குறிப்பால் உணர்ந்த வானர வீரர் வினவுதல்

6016.

‘பொருதமை புண்ணே சொல்ல, வென்றமை போந்த
                           தன்மை
உரைசெய, ஊர் தீஇட்டது ஓங்கு இரும் புகையே
                           ஓத,
கருதலர் பெருமைதேவி மீண்டிலாச் செயலே காட்ட,
தெரிதரஉணர்ந்தேம்; பின்னர், என் இனிச்
                          செய்தும் ?’ என்றார்.

     பொருதமை புண்ணேசொல்ல - (வானர வீரர்கள்அனுமனை
நோக்கி,நீ சொல்லாவிட்டாலும்) நீ அங்குப் போர் புரிந்ததை உன் உடம்பில்
உள்ளகாயங்களே தெரிவிக்கவும்; வென்றமை போந்த தன்மை உரை செய
-
நீபகைவரை வென்ற தன்மையை நீ இங்கு திரும்பி வந்த நிலையே
சொல்லவும்;ஊர் தீ இட்டது ஓங்கு இரும்புகையே ஓத - இலங்கை நகரில்
நீ நெருப்புவைத்ததை உயர்ந்து ஓங்கிய பெரிய புகையே அறிவிக்கவும்;
கருதலர்பெருமை - அப் பகைவர்களது வலிமை முதலிய சிறப்புகளை;
தேவிமீண்டிலா செயலே காட்ட - பிராட்டி உன்னோடு திரும்பி வராத
செயலேஎடுத்துக்காட்டவும்; தெரிதர உணர்ந்தோம் - தெளிவாக அறிந்து
கொண்ே்டாம்; பின்னர் இனி என் செய்தும் என்றார் - இனிமேல், என்ன
செய்யக் கடவோம் என்று வினாவினார்கள்.

      வானர வீரர்உணர்ந்த வகை அனுமான அளவை எனப்படும் -
அனுமானம் - காரியத்ததால் காரணம் அறிதல். கருதலர் - நன்மையை
எண்ணாதவர்.                                             (10)

அனைவரும்இராமபிரானைக்காண விரைதல்

6017.

‘யாவதும், இனி, வேறு எண்ணல் வேண்டுவது
                          இறையும் இல்லை;
சேவகன்தேவிதன்னைக் கண்டமை விரைவின்
                          செப்பி,