| | ஆவது, அவ் அண்ணல் உள்ளத்து அருந் துயர் ஆற்றலே ஆம்; போவது புலமை’ என்னா, பொருக்கென எழுந்து போனார். |
இனி வேறு எண்ணல்வேண்டுவது யாவதும் இறையும் இல்லை - இனிமேல்,வேறு எண்ணிப் பார்க்க வேண்டியது, எதுவும் சிறிதும் இல்லை; ஆவது சேவகன் தேவிதன்னை கண்டமை விரைவின் செப்பி - இனி நாம் செய்யத்தக்கது மகாவீரனான இராமபிரானுடைய மனைவியாகிய சீதையைப் பார்த்ததை விரைவில் சென்று சொல்லி; அவ் அண்ணல் - அந்த இராமபிரானது,; உள்ளத்து அருந்துயர் ஆற்றலே ஆம் - மனத்தில் உள்ள, போக்குதற்கு அரிய துன்பத்தைத் தணியச் செய்தலே ஆகும்; போவதே புலமை என்னா - (அதற்காக இனி இராமபிரானிடம்) செல்வதே அறிவுள்ள செயலாகும் என்று அனைவரும் ஒருமித்த கருத்தினராய்க் கூறி; பொருக் கென எழுந்து போனார் - விரைவில் எழுந்து சென்றனர். இது, எல்லா வானரவீரரும் ஒரு சேரத் தீர்மானித்துச் சென்ற செயலைக் கூறுவதாகும். பொருக்கென விரைவுக் குறிப்பு. (11) வானர வீரரின்உரைப்படி, அனுமன் இராமனிடம்முந்திச் செல்லுதல். | 6018. | ‘ஏத நாள்இறந்த; சால வருந்தினது இருந்த சேனை; ஆதலால்விரைவின் செல்லல் ஆவதுஅன்று; அளியம் எம்மைச் சாதல் தீர்த்துஅளித்த வீர ! தலைமகன் மெலிவு தீரப் போது நீமுன்னர்’ என்றார்; ‘நன்று’ என அனுமன் போனான். |
அளியம் எம்மைசாதல் தீர்த்து அளித்த வீர ! - உம்மால் அன்பு செய்யத்தக்கவராகிய எங்களை இறந்து போதலினின்றும் நீக்கிக் காத்தருளிய பெரிய வீரனே !; ஏத நாள் - பிராட்டியைத் தேடி வரும் காரணமாய்க் குறிப்பிட்ட நாட்கள்; இறந்த - கடந்து போயின; இருந்த சேனை சால வருந்தினது - உம் வரவை எதிர் நோக்கி இங்கு தங்கியிருந்த சேனை, மிகவும் துயரம் மேற் கொண்டது; விரைவின் செல்லல் ஆவது அன்று ஆதலால் - |