பக்கம் எண் :

832சுந்தர காண்டம்

வேகமாகச் செல்லும்வலிமை உடையது அல்ல ! ஆகையால்; தலைமகன்
மெலிவு தீர நீ முன்னர் போது என்றார் -
தலைவனான இராமபிரானது
துன்பம் நீங்க, நீ முன்னதாக, அப்பெருமானிடம் போவாயாக என்று வானர
வீரர் கூறினார்கள்; நன்று என அனுமன் போனான் - ‘நல்லது’ என்று
சொல்லிவிட்டு இராமபிரான் இருக்கும் இடம் நோக்கி அனுமன் சென்றான்.

     ஏத நாள் -பிராட்டியைத் தேடி வரும் காரணமாகக் குறிக்கப்பட்ட நாள்;
அது ஒரு மாதத் தவணை; ‘ஒரு மதி முற்றுறாத முன் முற்றுதி்ர்’ (கம்ப. 4457)
குறிப்பிட்ட நாள் கடந்தமையால், தமது அரசன் சுக்கிரீவன் தண்டிப்பானே
என்பது, சேனையின் வருத்தம். சாதல் தீர்த்து அளித்தல் - சேனை சாகத்
துணிந்தது. ‘மாண்டுறுவது நலம் என வலித் தனம்’. (கம்ப. 4658) அனுமன்,
இராமபிரானிடம் விரைவில் செல்ல வேண்டியதைக் காரணத்துடன் வானர
வீரர்கள் கூறியதைத் தெரிவிப்பது இது.                         (12)

6019.

முத் தலைஎஃகினாற்கும் முடிப்ப அருங் கருமம்
                            முற்றி,
வித்தகத் தூதன்மீண்டது இறுதியாய் விளைந்த
                            தன்மை,
அத் தலை அறிந்தஎல்லாம் அறைந்தனம்;
                           ஆழியான்மாட்டு
இத் தலைநிகழ்ந்த எல்லாம் இயம்புவான் எடுத்துக்
                           கொண்டாம்.

     வித்தகத் தூதன்- சதுரப்பாடுடைய தூதனாகிய அனுமன்; முத்தலை
எஃகினாற்கும் -
மூன்று தலைகளை உடைய சூலாயுதம் ஏந்திய
சிவபிரானுக்கும்; முடிப்ப அரும் கருமம் முற்றி - செய்து முடிப்பதற்கு
அருமையான காரியத்தை நிறைவேற்றி; மீண்டது இறுதியாய் - திரும்பி
வந்தது முடிவாக; அத்தலை விளைந்த தன்மை அறிந்த எல்லாம்
அறைந்தனம் -
அங்கு நிகழ்ந்த செயல்களை தெரிந்த வரையிலும்,
சொன்னோம்; இத்தலை ஆழியான் மாட்டு நிகழ்ந்த எல்லாம் - இனி,
இவ்விடத்தில் (கிட்கிந்தையில்) இராமபிரானிடத்தில் நடந்தனவற்றை எல்லாம்;
இயம்புவான் எடுத்துக் கொண்டாம் - சொல்வதற்குத் தொடங்கினோம்.

     இக்கவிதை,கவிக் கூற்று, முத்தலை எஃகினாற்கும் முடிப்பரும் கருமம்:-
இலங்கையை எரியூட்டுதல். செயற்கரும் காரியம்