| | மறித்து இவண்வந்திலர்; மாண்டுளார்கொலோ ? பிறித்துஅவர்க்கு உற்றுளது என்னை ?- பெற்றியோய் !’ |
பெற்றியோய் -நற்பண்புடையவனே !; வெறிகரும் குழலியை தென் திசை நாடல் மேயினார் - நறு மணம் உள்ள கரிய கூந்தலை உடைய சீதையை தெற்குத் திசையில் தேடுதலை மேற்கொண்டு சென்ற அனுமன் முதலிய வானர வீரர்கள்; குறித்த நாள் இகந்தன குன்ற - நாம் குறிப்பிட்டுக் கூறிய தவணை நாட்கள் கடந்தன; நாள் கடந்து தேயவும்; இவண்மறித்து வந்திலர் - இங்கு திரும்பி வந்தாரல்லர்; அவர்க்கு - தேடச் சென்ற அவ்வானர வீரர்க்கு; பிறிது உற்றுளது என்னை ? - வேறு என்ன நேர்ந்துள்ளது ?; மாண்டுளார் கொலோ ? - இறந்து போயினார்களோ ? குறித்தகாலத்துக்குள், தென் திசை சென்றவர்கள் வராததனால்; மாண்டுவிட்டனரோ என்று ஐயமுறுகின்றான் இராமபிரான். ‘பிறிது’ என்பது எதுகை நோக்கி பிறித்து என நின்றது; செய்யுள் விகாரம். (17) | 6024. | ‘மாண்டனள்அவள்; “இவள் மாண்ட வார்த்தையை மீண்டு அவர்க்குஉரைத்தலின், விளிதல் நன்று” எனா, பூண்டது ஓர் துயர்கொடு பொன்றினார்கொலோ ? தேண்டினர்,இன்னமும் திரிகின்றார்கொலோ ? |
அவள் மாண்டனள்- (அதுவன்றி) அச்சீதை இறந்து விட்டாள்; இவள் மாண்ட வார்த்தையை மீண்டு அவர்க்கு உரைத்தலின் - ‘இந்த சீதா பிராட்டி இறந்த செய்தியைத் திரும்பிச் சென்று அந்த இராமபிரான் முதலியவர்களுக்குச் சொல்லுவதிலும்; விளிதல் நன்று எனா - நாம் இறந்து போதலே நல்லது’ என்று எண்ணி; பூண்டது ஓர் துயர் கொடு பொன்றினார் கொலோ? - மேற்கொண்டதொரு துன்பத்தினால் (அவ்வனுமன் முதலானோர்) இறந்தார்களோ ?; இன்னமும் தேண்டினர் திரிகின்றார்களோ ? - (அன்றி) இன்னும், தேடினவர்களாய் வேறுபல இடங்களிலும் அலைகின்றார்களோ ?. இராமபிரான்ஐயப்பாடு, மேலும் நீளுகின்றது. (18) | 6025. | ‘கண்டனர்அரக்கரை, கறுவு கைம்மிக, மண்டு அமர்தொடங்கினார், வஞ்சர் மாயையால் |
|