| | விண்தலம்அதனில் மேயினர்கொல் ? வேறு இலாத் தண்டல் இல்நெடுஞ் சிறைத் தளைப் பட்டார்கொலோ ? |
அரக்கரைக்கண்டனர் - (சீதையை எடுத்துச்சென்ற இராவணன் முதலிய) அரக்கர்களைப் பார்த்து; கறுவு கைம்மிக மண்டு அமர் தொடங்கினார் - கோபம் அதிகரிக்க, மிகுதியான போரைச் செய்யத் தொடங்கி; வஞ்சர் மாயையால் விண்தலம் அதனில் மேயினார் கொல் ? -வஞ்சகச் செயலுடைய அவ்வரக்கர்களின் மாயச் செயலால் (இறந்து) வீரசுவர்க்கத்தில் சென்று சேர்ந்தார்களோ ?; தண்டல் இல் நெடுஞ் சிறை தளைப்பட்டார் கொலோ ? - (எக்காலத்திலும்) நீங்குதல் இல்லாத பெரிய சிறையில் கட்டுப்பட்டார்களோ ? ஓ: அசை. (19) | 6026. | ‘ “கூறின நாள், அவர் இருக்கை கூடலம்; ஏறல் அஞ்சுதும்”என, இன்ப துன்பங்கள் ஆறினர், அருந்தவம் அயர்கின்றார்கொலோ ? வேறு அவர்க்குஉற்றது என் ? விளம்புவாய் !’ என்றான். |
கூறின நாள் அவர்இருக்கை கூடலம் - (நமக்குத் தவணையாகக் குறிப்பிட்டுச்) சொன்ன நாட்களுள் இராமன் முதலியோர் இருப்பிடத்தைச் சேர்ந்தோமில்லை; ஏறல் அஞ்சுதும் என - இனி அங்கு சென்று சேரும் செயலுக்குப் பயப்படுகின்றோம் என்று தீர்மானித்து; இன்ப துன்பங்கள் ஆறினர் - இன்ப துன்ப உணர்ச்சிகளினின்றும் நீங்கியவர்களாய்; அருந்தவம் அயர்கின்றார் கொலோ - அரிய தவத்தில் ஈடுபட்டு மற்றவற்றை மறந்தார்களோ ?; அவர்க்கு வேறு உற்றது என் ? - அந்த வீரர்களுக்கு வேறே நேர்ந்தது யாதோ ?; விளம்புவாய் என்றான் - ‘சொல்வாயாக’ என்று (இராமபிரான் சுக்கிரீவனைப்) பார்த்துக் கேட்டான். குறித்த காலம் கடந்ததனால், மீண்டும் இராமன் இருக்கும் இடத்துக்கு வருதற்கு அஞ்சி, வானர வீரர்கள் தவத்தை மேற்கொண்டனரோ என்பதும் இராமபிரான் உள்ளத் தெழுந்த ஒரு ஐயம் ஆகும். (20) |