பக்கம் எண் :

838சுந்தர காண்டம்

     சீதா பிராட்டிகற்புத் திண்மையுடன் இலங்கையில் இருக்கின்றாள் என்ற
உண்மையை, இராமபிரான் முதலில் அறிந்து கொள்வதற்காக, அனுமன் தென்
திசை நோக்கி வணங்கி, வாழ்த்தினான் என்க. மொய் - வலிமை; சீதை,
திருமகளின் அவதாரம் என்பதை முளரி நீங்கிய தையல்’ என்ற தொடர்
காட்டுகின்றது.                                              (22)

செய்தி உணர்ந்தஇராமபிரான் மகிழ்தல்

6029.

திண்திறல் அவன் செயல் தெரிய நோக்கினான்;
‘வண்டு உறைஓதியும் வலியள்; மற்று இவன்
கண்டதும் உண்டு;அவள் கற்பும் நன்று’ எனக்
கொண்டனன்,குறிப்பினால் உணரும்
                             கொள்கையான்.

     குறிப்பினால்உணரும் கொள்கையான் - அவயவங்களின்குறிப்பைக்
கொண்டு நடந்ததை நன்கு உணர்ந்து கொள்ளும் நுண்ணறிவினனான
இராமபிரான்; திண் திறல் அவன் செயல் தெரிய நோக்கினான் - மிக்க
வலிமை உடைய அந்த அனுமனது செய்கையை நன்றாகப் பார்த்து அறிந்து;
வண்டு உறை ஓதியும் வலியள் -
வண்டுகள் தங்கும் கூந்தலை உடைய
பிராட்டியும் நன்னிலையில் உறுதியுடன் இருக்கின்றாள்; இவன் கண்டதும்
உண்டு -
இவ்வனுமன் அவளை நேரில் பார்த்து வந்ததும் உண்டு; அவள்
கற்பும் நன்று என கொண்டனன் -
அவளது கற்பும்
சிறப்புடையதாயிருக்கின்றது என்று ஊகித்துக் கொண்டான்.

      அனுமன் தென் திசைநோக்கித் தொழுத செய்கையிலிருந்து, இராமபிரான்உணர்ந்து கொண்ட பிராட்டியின் நிலை பற்றிப் பேசப்பட்டது
என்க.                                                    (23)
 

6030.

ஆங்கு அவன்செய்கையே அளவை ஆம் எனா,
ஓங்கியஉணர்வினால், விளைந்தது உன்னினான்;
வீங்கின தோள்;மலர்க் கண்கள் விம்மின;
நீங்கியது அருந்துயர்; காதல் நீண்டதே.

     ஆங்கு அவன்செய்கையே - (இராமபிரான்)அவ்விடத்தில் அனுமன்
செய்த குறிப்பான செயலே; அளவை ஆம் எனா - பிராட்டியின்
நன்னிலையை அறிந்து கொள்வதற்கு அளவு கருவியாகும் என்று; ஓங்கிய
உணர்வினால் விளைந்தது உன்னினான் -
சிறந்த (தனது குறிப்பறியவல்ல)
அறிவினால் அங்கு