| | காயம் என்னும் அக் கணக்கறு பதத்தையும் கடக்க ஏயும் நன்மதில்இட்டனன் - கயிலையை எடுத்தான். |
கயிலையைஎடுத்தான் - கயிலையைப் பெயர்த்துஎடுத்த இராவணன்; தேவர் - தேவர்கள்; தீய செய்குநர் - தீமையைச் செய்பவர்கள்; அனையவர் - அந்தத் தேவர்கள்; சேரும் - இலங்கையை அடையும்; வாயில் இல்லது - வழியே இல்லாத; ஓர் வரம்பு அமைக்குவென் - ஒரு தடையை அமைப்பேன்; என - என்று; மதியா - ஆலோசித்து; காயம் என்னும் - ஆகாயம் என்று கூறப்பெற்ற; அக்கணக்கறு பதத்தையும் - அந்த முடிவற்ற மண்டலத்தையும்; கடக்க - தாண்டி அப்பாற் செல்லும்படியாக; ஏயும் - பொருந்திய; நன்மதில் இட்டனன் - நல்ல மதிலை (இலங்கைக்கு) அமைத்தான். வரம்பு - தடை.காதளவு வருவன, கடப்பன ஆகல் ஆகாது என இட்ட வரம்பு (தக்க - பரணி - 132உரை) “ஏயும் நன்மதில்எடுத்தனன் கயிலையன்று எடுத்தான்’ என்னும் பாடம் கட்டுரைச் சுவைபடவுள்ளது ஆல் - அசை. ஆகையினாலே என்று பொருள் கூறினும் பிழையில்லை. (22) | 4857. | கறங்குகால்புகா; கதிரவன் ஒளிபுகா; மறலி மறம் புகாது; இனிவானவர் புகார் என்கை வம்பே ! திறம்புகாலத்துள் யாவையும் சிதையினும், சிதையா அறம் புகாது,இந்தஅணி மதிள் கிடக்கை நின்று அகத்தின் !* |
இந்த - ; அணி -அழகிய;மதிள் கிடக்கை நின்று - மதிளின் பரப்பிலிருந்து; அகத்தின் - இலங்கைக்குள்ளே; கறங்கு கால் புகா - சுழன்று வீசும் காற்றுகள் நுழையா; கதிரவன் ஒளி புகா - சூரியனின் வெப்பக்கதிர்கள் நுழையா; மறலி மறம் புகாது - யமனுடைய கொலைத்தொழில் நுழையாது; இனி - இனிமேல்; வானவர் புகார் என்கை - தேவர்கள் (போர் செய்ய எண்ணி) நுழையார் என்று கூறுதல்; வம்பே - வீண் மொழியாகும்; திறம்பு காலத்துள் - (பொருள்யாவும் மாறுபடும்) ஊழிக்காலத்தில்; யாவையும் சிதையினும் - எல்லாம் அழிந்தாலும்; சிதையா - விகாரம் அடையாத; அறம் - அறக்கடவுள்; புகாது - நுழையாது. |