பக்கம் எண் :

திருவடி தொழுத படலம்849

தன்மை நோக்கி -சமயத்தைப் பெறும் நிலையை எதிர்பார்த்து; யான்
இருந்த காலை -
நான் இருந்த பொழுது; அலங்கல் வேல் இலங்கை
வேந்தன் எய்தினன்-
மாலை அணிந்த வேற்படை ஏந்திய இலங்கை
மன்னனாகிய இராவணன் அங்கு வந்து; இரந்து கூறி இறைஞ்சினன் -
(தன்னை விரும்பும்படி) இரக்கத்தோடு பலவிதமான வார்த்தைகளைச் சொல்லி,
பிராட்டியை வணங்கினான்; நங்கை இருந்து வெய்து உரை சொல்ல -
பிராட்டி நில்லாது, இருந்து கொண்டே கடுமையான வார்த்தைகளைக் கூற; சீறி
கோறல் மேற் கொண்டு விட்டான் -
(அதைக் கேட்ட அவன்) கோபித்து,
பிராட்டியைக் கொல்லத்தலைப்பட்டுவிட்டான்.

     பிராட்டியின்கற்புத் திண்மையைத் தான் நேரில் காண்பதற்கு நிகழ்ந்த
சந்தர்ப்பத்தை, இதன் மூலம் விளக்கினான் அனுமன் என்க.          (37)

6044.

‘ஆயிடை,அணங்கின் கற்பும், ஐய ! நின் அருளும்
                            செய்ய
தூய நல் அறனும்என்று, இங்கு இனையன
                            தொடர்ந்து காப்ப,
போயினன்,அரக்கமாரை, “சொல்லுமின் பொதுவின்”
                           என்று, ஆங்கு
ஏயினன்; அவர்எலாம் என் மந்திரத்து
                            உறங்கியிற்றார்.

     ஐய ! -ஐயனே!; ஆயிடை அணங்கின் கற்பும் - அப்பொழுது
பிராட்டியின் கற்புத் திண்மையும்; நின் அருளும் செய்ய தூய நல் அறனும்
-
உனது அருளின் சிறப்பும் செம்மையும், தூய்மையும் நன்மையும் நிறைந்த
அறமும்; என்று இனையன தொடர்ந்து காப்ப - என்று சொல்லத்தக்க
இவைகள் எல்லாம் பிராட்டியின் உயிரை விடாமல் பாதுகாக்க; ஆங்கு -
அப்பொழுது, (இராவணன்); அரக்கிமாரை - (அருகில்  காவல் செய்து
கொண்டிருக்கும்) அரக்கியர்களை; பொதுவின் சொல்லுமின் - நன்மை
விளைதலும் தீய பயத்தலுமான வார்த்தைகளைப் பொதுப் படக் கூறுங்கள்;
என்று ஏயினன் -
என்று கட்டளையிட்டு;  போயினன் - விட்டுத்
தன்னிடத்துக்குச் சென்றான்; அவர் எலாம் என் மந்திரத்து உறங்கியிற்றார்
-
அந்த அரக்கியரெல்லாம் நான் உச்சரித்த மந்திரத்தின் வலிமையால்
தூங்கிவிட்டார்கள்.