| | துஞ்சுறு பொழுதில் தந்தாய் துறக்கம்” என்று உவந்து சொன்னாள்- மஞ்சு என, வனமென் கொங்கை வழிகின்ற மழைக் கண் நீராள். |
மஞ்சு என வனமென் கொங்கை வழிகின்ற மழைக்கண் நீராள் - (மலைமேல் பெய்யும்) மழை போல், அழகும் மென்மையும் தவழும் தனங்களின் மேல் பெய்து தொடும் குளிர்ந்த கண்களின் நீரை உடையவளான பிராட்டி; இது, வஞ்சனை - (நான் இவ்வாறு உன் திருநாமம்) கூறியதை வஞ்சனை உடைய; அரக்கர் செய்கை - அரக்கர்களது செய்கையால்; என மனம் கொண்டேயும் - என்று கருதிச் சந்தேகித்தும்; என் பால் அளியை - (என்னை நோக்கி) என்னிடம் அருள் கொண்டவன் நீ; துஞ்சுறு பொழுதில் - யான் இறக்கும் சமயத்தில்; அஞ்சன வண்ணத்தான் தன் பெயர் உரைத்து - மை போல் கரிய திரு மேனியை உடைய இராமபிரானது திருநாமத்தைச் சொல்லி; துறக்கம் தந்தாய் - எனக்குப் பரலோக இன்பத்தைத் தந்தாய்; என்று உவந்து சொன்னாள் - என்று மகிழ்ச்சியோடு என்னிடம் கூறினாள். ‘எம்பிரான் நாமம் சொல்லி உருக்கினன் உணர்வைத்தந்தான் உயிர் இதின் உதவி உண்டோ’ என்று (கம்ப. 5254.) பிராட்டி கூறியதை அனுமன் நினைவுபடுத்திக் கொண்டு சொன்னது இது. எம்பிரான் திருநாமம் கேட்டல் துறக்க இன்பத்துக்குச் சமமானது. (40) | 6047. | ‘அறிவுறத்தெரியச் சொன்ன, பேர் அடையாளம் யாவும், செறிவுறநோக்கி, நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை முறிவு அற எண்ணி,வண்ண மோதிரம் காட்ட, கண்டாள்; இறுதியின் உயிர்தந்து ஈயும் மருந்து ஒத்தது, அனையது-எந்தாய் ! |
எந்தாய் -எமதுதலைவனே !; அறிவு உற தெரிய சொன்ன பேர் அடையாளம் யாவும் - பிராட்டி அறியும்படி அடியேன் தெளிவாகச் சொன்ன பெரிய அடையாளங்களை எல்லாம்; செறிவு உற நோக்கி - அதனைப் பொருத்தமாகப் பார்த்து; நாயேன் சிந்தையில் திருக்கம் இன்மை முறிவு அற எண்ணி - அடியேன் |