| | உரம் உறு வனமுலை வெரிநின் மூன்று உளார்; பொரு அரும் உலகையும் புதைக்கும் வாயினார். |
திருக்கு - கண்கள்.வெரிந் - முதுகு. (55-1) | 406. | என்னவாழ்த்திய மாருதி, ‘ஈது நாம் இன்னும்காண்டும்’ என, மறைந்து எய்தினான்; சொன்ன வாள் அரக்கன் சுடு தீச் சுடும் அன்னை வைகுறும்அவ் இடத்து ஆயினான். |
அரக்கன் -இராவணன். (101-1) | 407. | ‘இன்று நாளைஅருளும் திருவருள் என்று கொண்டு,இதனால் அழிவேனை நீ கொன்று இறந்தனைகூடுதியோ ? குழை தின்று உறங்கிமறம் தவாச் செல்வியே ! |
காட்சிப்படலம்102ஆம்பாட்டை (கம்ப. 5171) தழுவியது. (103-1) | 408. | என்றனன்,எயிறு தின்னா, எரி எழ விழித்து நோக்கி நி....லத் தாவிநிலன் ஒளி கலனில் தோய, மின்தனை மின்சூழ்ந்தென்ன அரம்பையர் சூழ, மெல்லச் சென்று,அவன்தன்னைச் சார்ந்தாள், மயன் அருள் திலகம் அன்னாள். |
மயன் அருள் திலகம் -மண்டோதரி. (149-1) | 409. | பொருக்கெனஅவனி...க...கொடி முறுவல் பூப்ப, அரக்கர்கோமகனை நோக்கி, ‘ஆண்மை அன்று; அழகும் அன்றால் செருக்கு உறுதவத்தை, கற்பின் தெய்வத்தை, திருவை இன்னே வெருக் கொளச்செய்வது ! ஐயா !’ என, இவை விளம்பலுற்றாள்; |
அரக்கர் கோமகனை -இராவணனை. இங்கே ஐந்து பாடல்கள் 408 முதல் 412 வரை. மண்டோதரி இராவணனை |