பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்867

நோக்கிப் பேசியதாகவருவன. இத்ததைய குறிப்பு கம்பர் வேறெங்கும்
அமைத்ததாக இல்லை.                                      (149-2)

410.

‘செம் மலர்த் திருவின் நாளும் சிறப்பு உறு திலதம்
                                  அன்னார்,
வெம்மை உற்றுஉன்மேல் வீழ்வார், வெள்கியே நகை
                                செய்து ஓத,
தம் மனத்து ஆசைவேறோர் தலைமகற்கு உடையாள்
                                தன்னை
அம்மலற்றுஇறைஞ்சும் வேட்கை ஆடவற்கு உரியது
                                அன்றே.

     நகை செய்து -இகழ்ந்து. இறைஞ்சும் வேட்கைதான் உள்ளதே அன்றி
வேறு பயன் இல்லை என்பதாம்.                             (149-3)

411.

புலத்தியன்மரபின் வந்து புண்ணியம் புரிந்த
                               மேன்மைக்
குலத்து இயல்புஅதனுக்கு என்றும் பழி அன்றோ ?
                      என்றும் கொள்ளாய் !
வலத்து இயல்ஆண்மைக்கு ஈது மாசு’ மதிப்பி.......
........................................................................................

     வலத்து இயல் ஆண்மை -சென்ற போர் தொறும் வென்றியே
புனையும்வல்லமையாம்.                                  (149-4)

412.

வாச மென்குழலினாரால், மண்ணினில், வானில்,
                                 யார்க்கும்
நாசம் வந்துஏன்று... மறைகளே நவிலும் மாற்றம்
பூசல் வண்டுஉறையும் தாராய் ! அறிந்தும் நீ,
                          புகழால், பொற்பால்,
தேசுடையவளோ, என்னின், சீதையும் ?..........

     புகழ் பொற்பு தேசுஆகியவற்றில் யானும் சீதையும் ஒன்றே என்பது
மண்டோதரி வார்த்தை.                                    (149-5)