| 413. | என்றார்;இன்னும் எத்தனை சொல் கொண்டு இதம் மாறக் கன்றாநின்றார்,காலும் எயிற்றார், கனல் கண்ணார்; ஒன்றோ ?மற்றும் ஆயிர கோடி உளர் அம்மா ! பொன்றா வஞ்சம்கொண்டவர் இன்னும் புகல்கின்றார்; |
அரக்கியர் சீதையைமனங்கொளத் தேற்ற வெருட்டி உரப்பியவாறு சொல்லப் பெறுகிறது. (156-2) | 414. | தீயோர்செய்கைதானும், இராமன் ஒரு தேவித் தாயாள் துன்பும்,மாருதி கண்டே தளர்வு எய்தி, மாயாது ஒன்றேஅன்றி, மனத்தே மலி துன்பத்து ஓயாது உன்னிச்சோர்பவன் ஒன்று அங்கு உணர்வுற்றான். |
தாயாள் - சீதை.மனத்தே மிக்க துன்பத்தால், சலியாது கருதிச் சோர்பவன் ஆயினன் அனுமன். (159-1) 4. உருக் காட்டுபடலம் | 415. | சுற்றிய கொடி ஒன்றைத் துணிந்து, தூயள், ஓர் பொன் தடங்கொம்பினில் பூட்டி, ‘பூமியே ! நல் தவம்உடையள் யான்ஆகின், நாயகன் வெற்றி சேர்திருவடி மேவுவேன்’ என்றாள். |
ஒரு கொடியை வெட்டிக்கொம்பில் பூட்டித் தற்கொலைக்கு முயற்சித்தாள் பிராட்டி. (21-1) | 416. | என்றுஅருந்ததி, மனத்து, எம்மை ஆளுடைத் துன்ற அருங் கற்பினாள், சுருதி நாயகன் பொன் தரு மலர்ப் பதம் வழுத்தி, பூங் கொடி தன் தனிக்கழுத்திடைத் தரிக்கும் ஏல்வையின். |
சுருதி நாயகன் -இராமன், ஏல்வை - பொழுது. (21-2) | 417. | எய்தினள்,பின்னம் எண்ணாத எண்ணி, ‘ஈங்கு உய் திறம்இல்லை !’ என்று ஒருப்பட்டு, ஆங்கு ஒரு |
|