பக்கம் எண் :

மிகைப் பாடல்கள்869

 

கொய்தளிர்க் கொம்பிடைக் கொடி இட்டே தலை
பெய்திடும்ஏல்வையில், தவத்தின் பெற்றியால்.

     மேற்பாட்டு போன்றதே இதுவும்.                         (21-3)

418.

தோன்றினன், தனது உருக் காண; தூயவள்
மூன்றுஉலகினுக்கும் ஓர் அன்னை, மொய்ம் மலர்
தேன் திகழ்திருவடி சென்னியால் தொழுது
ஆன்ற பேர் அன்புகொண்டு, அறைதல்மேயினான்;

     அனுமன் சீதையைக் கண்டுதிருவடி தொழுதல்.             (22-1)

419.

நோக்கினேன்; அரக்கியர், நுனிப்பு இல் கோடியர்
நீக்கினர்துயிலினை; நின்னைக் காணுதற்கு
ஆக்கிய காலம்பார்த்து, அயல் மறைந்து, பின்
தாக்கு அணங்குஅவர் துயில் கண்டு, சார்ந்துளேன்.

     நுனிப்பு - கணக்கு.தாக்கு அணங்கு அவர் - தீண்டி வருத்தும்
தெய்வம்போன்றலர் அரக்கியர்.                            (23-1)
                         

420.

‘நிலை பெற,அயன் இருந்து, இயற்று நீலத்தின்
சிலை மணிவள்ளமும் உவமை சேர்கல;      
“அலவன், அது” என்பரால், அறிவு இலோர்; அவர்
உலைவு அறு திருமுழங்காலுக்கு ஒப்பு உண்டோ ?

     இராமன் முழங்காலுக்குஒப்பு பிரமன் செய்த நீலமணியால் ஆகிய
வள்ளம். நண்டு என்பன பொருத்தமற்றன என்பது இப்பாடல் கருத்து. (43-1)

421.

‘எள்ளற்கு அரிய நிலை ஆகி, இயைந்து தம்மில்
                            இணை உர ஆய்
தள்ளப்படாத தகைஆகி, சார் கத்திரிகை வகை
                            ஒழுகா,
அள்ளற் பள்ளத்துஅகன் புனல் சூழ் அகன்ற
                            வாவிக்குள் நின்ற
வள்ளைத் தண்டின்வனப்பு அழித்த, மகரம்
                      செறியாக்குழை’ என்றான்