குண்டலம்அணியாச் செவிகளின் உவமை - கத்திரிக்கோலின் காது, வள்ளைத் தண்டு. (49-1) | 422. | தவம் தந்தநெஞ்சின் தனது ஆர் உயிர்த் தம்பியோடும் நவம் தந்தகுன்றும், கொடுங் கானமும், நாடி ஏகி, கவந்தன்தனது ஆவிகவர்ந்து, ஒரு காலும் நீங்காச் சிவம் தந்து,மெய்ம்மைச் சபரிக்குத் தீர்ந்து வந்தான். |
கவந்தனுக்கு சிவம்தந்தான் - சிவம் - மங்கலம். தீர்ந்து வந்தான் - முடிபாகி வந்தான் என்று சாம்யப் பொருள் உரைக்கலாம். (88-1) | 423. | ‘சென்றேன்அடியேன், உனது இன்னல் சிறிதே உணர்த்தும் அத்துணையும் அன்றே, அரக்கர்வருக்கம் உடன் அடைவது; அல்லாது, அரியின் கை மன்றே கமழும்தொடை அன்றே, நிருதர் குழுவும் மாநகரும் என்றே இறைஞ்சி,பின்னரும், ஒன்று இசைப்பான் உணர்ந்தான் ஈறு இல்லான். |
அனுமன், நான்இராமன்பால் சென்று தெரிவிக்கும் அளவுதான் தாழ்த்தது. தெரிவித்தவுடன் அரக்கரும் இலங்கையும் ‘குரங்கின் கைப் பூமாலை போல்’ ஆகிவிடும் என்று பிராட்டியை வணங்கி, பிறகும் ஒன்று சொல்ல மனத்தில் உணர்ந்தான் ஈறு இல்லான் - அனுமன். சிரஞ்சீவி என்னும் பொருள். (117-1) 5. சூடாமணிப்படலம் | 424. | ‘சேண் தவாநெறி செல் பகல் தீங்கு அற, மீண்டு,தம்பியும் வீரனும் ஊர் புக, பூண்ட பேர்அன்பினோருடன் போதியால் ! ஈண்டு யான் வரம்வேண்டினென், ஈறு இலாய் !’ |
ஈறு இலாய் - முடிவுஇல்லாத அனுமனே ! ஊர் -அயோத்தி. (31-1) |