பக்கம் எண் :

872சுந்தர காண்டம்

 

“வெய்யவன் கண்இரண்டொடு போக !” என, விட்ட
தெய்வ வெம் படைஉற்றுள தன்மை தெரிப்பாய்.

     அவன் - சயந்தன்.வள்ளல் - இராமன் “கண் இரண்டொடு போக”
சயந்தன் ஆகிய காகத்துக்கு இரண்டு கண்களை மட்டும் போக்கியது, ஆகும்.
தெய்வ வெம் படை - “அயல் கல் எழு புல்லால் வேக வெம்படை” என்று
(5421) முன்பு கூறப்பட்டது.                                    (77-3)

430.

“எந்தை,நின் சரணம் சரண் !” என்ற இதன்னால்,
முந்தை உன்குறையும் பொறை தந்தனம்; முந்து உன்
சந்தம் ஒன்றுகொடித் திரள் கண்கள்தமக்கே
வந்து ஓர் நன்மணி நிற்க !” என, வைத்ததும்
                                   வைப்பாய்.

     காகம்எல்லாவற்றிற்கும் இரண்டு கண்களுக்கும் ஒரு மணி (ஒரு
பார்வை) நிற்க என வைத்து கூறப்பெறுகிறது.                    (77-4)

431.

‘வேகம் விண்டு சயந்தன் வணங்கி, விசும்பில்
போக, அண்டர்கள் கண்டு, அலர் கொண்டு
                               பொழிந்தார்;
நாக நம்பன்இளங் கிளை நன்கு உணராத,
பாகு தங்கியவென்றியின், இன் சொல் பணிப்பாய்.

     இளம் கிளை -இலக்குவன். உணராத என்னாது ‘நன்கு உணராத’ என்ற
சொல்லாட்சி கருதுக. இதனைப் ‘பாகு தங்கிய வென்றி’ என்றது தன்னால்
மட்டுமே நுகர்ந்து இன்புறும் வெற்றியாதலின். தனக்காகத் தன் நாயகன்
மேற்கொண்ட செயல் ஆதலின் சீதை நினைந்து இன்புறற்கு ஏதுலாயிற்று.(77-5)

6.  பொழில்இறுத்த படலம் 

432. 

எனப் பதம்வணங்கி அன்னார் இயம்பிய வார்த்தை
                                       கேளா,
கனக் குரல் உருமுவீழ, கனமலை சிதற, தேவர்
மனத்து அறிவுஅழிந்து சோர, மாக் கடல் இரைப்புத்
                                      தீர,
சினத்து வாய்மடித்து, தீயோன், நகைத்து, இவை
                                செப்பலுற்றான்.